கொக்குவில் நம் ஊர் | ஊர் வலம் 02

Published on Author தண்பொழிலன்

“வில்வளைவான அமைப்புடைமையாற் குளங்களோடு சேர்ந்த பல தமிழ்ப்பெயர்கள் ஊர்ப்பெயராயின. பொத்துவில், தம்பிலுவில், கொக்குவில், கோண்டாவில், நந்தாவில், இனுவில், மல்வில், மந்துவில் இன்னும் பல இதற்கு உதாரணமாகும். செழிப்பான கியாதி நிறைந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த யாழ்ப்பாணக்குடா நாட்டிலமைந்த ஊர்களில் புகழ்பூத்த ஒரு ஊர், கொக்குவில். கொக்கு ஒரு பறவை, ஒரு பூமரம், ஒரு குதிரை, மாமரம் என்றெல்லாம் பொருள்படும்.” “கொக்குவில் நம் ஊர்” நூலுக்கான தன் அணிந்துரையில் யாழ்ப்பாணத்துக் கொக்குவில் பதியை இப்படித்தான் அறிமுகப்படுத்துகிறார் புலோலி முருகவே.… Continue reading கொக்குவில் நம் ஊர் | ஊர் வலம் 02

நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் சிலாகிக்கப்பட்டது 96 திரைப்படம். அதன் வெற்றிக்கும் சிறப்புக்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,  எல்லோரது வாழ்க்கையிலுமே மறக்க முடியாத பள்ளிப்பருவத்தை அத்திரைப்படம் சித்தரித்திருந்த விதமே அப்படத்தை அதிக கவனிப்புக்குள்ளாக்கி இருந்தது. ஆனால் அத்திரைப்படம் வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பேயே நம் நூலகம், அத்தகைய ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பள்ளிக்காலம் என்பது எல்லோருக்கும் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்துசெல்லும் ஒன்று. வகுப்பறைகளாக, நடைபாதைகளாக, மரத்தடிகளாக, பாடசாலைகள் நம் எல்லோர் மனதிலும்… Continue reading நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

அபூர்வ சிந்தாமணி | காலக்கண்ணாடி 06

Published on Author தண்பொழிலன்

இலங்கையில் இதழியல் துறையைப் பொறுத்தவரை, மிகச் சில பத்திரிகைகளே அதிகமாகக் கவனிக்கப்பட்டவையாகவும், பெருமளவு வாசகர்களைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. அத்தகைய பிரபலமான பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, சிந்தாமணி. சிந்தாமணி, 1980கள் முதல் கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக வெளியான வார இதழ். அரசியல், இலக்கியம், பண்பாடு, என்று பல்தரப்பட்ட தகவல்களுடன் சுமார் 50 பக்கங்களில் இது வெளிவந்தபடி இருந்தது. இதே பத்திரிகையின் நாளிதழ், தினபதி என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருந்தது. இம்மாத காலக்கண்ணாடியில், அந்த சிந்தாமணி இதழ் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு… Continue reading அபூர்வ சிந்தாமணி | காலக்கண்ணாடி 06

ஏழாலை | ஊர் வலம் 01

Published on Author தண்பொழிலன்

சமூகமொன்றின் இருப்புக்கு வரலாறும் பண்பாடும் அத்தியாவசியமானது. வரலாறு, மற்றும் தொல்லியல் சான்றுகளை, அறியாமையாலும் வேறு புறக்காரணிகளாலும் நாம் கைவிட்டுச் செல்லும் இந்தக் காலத்தில், அவற்றை எதிர்காலத்துக்குக் கடத்த முடியாவிட்டாலும், ஆவணப்படுத்தியாவது வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நம் சமூக அலகுகளில்  ‘ஊர்’ என்பது முக்கியமான ஒன்று. அந்த மட்டத்திலேயே ஆவணப்படுத்தலை மேற்கொள்வது சிறப்பானது. ஊர் ஆவணப்படுத்தலை இன்னொருவர் செய்யாது, அந்தந்த ஊரவரே செய்யும் போது, அதன் பெறுமதி அதிகமாக இருக்கும். நம்பகத்தன்மை, சரிபிழை முதலிய பல தகவல்களையும் அதனுடன் இணைத்து ஆராயக்கூடியதாக… Continue reading ஏழாலை | ஊர் வலம் 01

தொழிற்கலை | இசைக்கருவி மேளம்

Published on Author தண்பொழிலன்

இசை மானுடனின் ஓய்வுப்பொழுதுகளை அழகாக்கி வருகின்ற மிகத் தொன்மையான கலை. வெற்று ஓசையான இரைச்சலை சந்தமாகவும் இசையாகவும் லயித்து அனுபவிப்பதற்கு மனிதன் எப்போது  அறிந்தான் என்பது சரியாகத் தெரியவில்லை. எனினும், மூங்கில்களிலிருந்து புல்லாங்குழலையும், வில்லிலிருந்து யாழையும், இறந்த விலங்கின் தோலிலிருந்து தண்ணுமையையும் மனிதன் இயல்பாகவே கண்டறிந்தான் என்பது ஒரு கருத்து. தமிழ் மரபில் இசைக்கு மிகப்பெரிய இடம் உண்டு. மிகப்பழைய தமிழ் இலக்கியங்களலிருந்தே நமக்கு இசை பற்றியும் இசைக்கருவிகள் பற்றியும் தொடர்ச்சியான சான்றுகள் கிடைத்தவாறு இருக்கின்றன. இசையை … Continue reading தொழிற்கலை | இசைக்கருவி மேளம்

அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் ,மாகாண, வலய மட்ட பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் பரிகார கற்றல் கையேடுகள் உட்பட மாணவர் கற்றல் கற்பித்தல் சார் விடயங்கள் போன்றவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான எழுத்து மூல அனுமதியை வடமாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுற்றறிக்கை மூலம் வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் வலயப்பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.   இதன் முதற்கட்டமாக , துணுக்காய்… Continue reading அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

அறுபதாண்டுகளுக்கு முன் ஒரு புத்தாண்டு பருவகாலம் | காலக்கண்ணாடி 05

Published on Author தண்பொழிலன்

நூலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய 2019 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!   இம்முறை காலக்கண்ணாடியில் நாம் பார்க்க இருப்பது, ஈழநாடு பத்திரிகை. யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து வெளியான பழம்பெரும் தினசரிகளில் ஒன்று. 1960 புத்தாண்டை அண்டி வெளியான அவ்விதழின் 1959 டிசம்பர் 26 இதழைத் தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம். “இடதுசாரிப் பிளவுகள்: டட்லி அதிர்ஷ்டம்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில், கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளைத் தோற்கடித்து யு.என்.பி வென்ற பின்னணி… Continue reading அறுபதாண்டுகளுக்கு முன் ஒரு புத்தாண்டு பருவகாலம் | காலக்கண்ணாடி 05