கனடாவில் “கலையரசி 2018”

Published on Author தண்பொழிலன்

கனடாவில் இயங்கிவரும் யாழ் இந்துக்கல்லூரி சங்கத்தின் “கலையரசி 2018” நிகழ்வானது, “எமது கலாசாரங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளுடன், எதிர்வரும் 7 ஒக்டோபர் 2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற இருக்கின்றது. கனடிய நேரம் மாலை 5.31 மணியளவில் பிளாட்டோ மார்கம் கலையரங்கில் இந்நிகழ்வு இடம்பெறும்.   யாழ் இந்துக்கல்லூரி சமூகமும் உள்ளூர்க்கலைஞர்களும் இணைந்து நடத்த இருக்கும் இந்த இயல் – இசை – நாடக விழாவில், வர்ண இராமேஸ்வரனின் திரை இசை ராகங்கள், ஹரிணியின் இன்னிசை, சண்முகலிங்கம் குழுவினரின்… Continue reading கனடாவில் “கலையரசி 2018”

யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

Published on Author தண்பொழிலன்

இலங்கை தொன்றுதொட்டே பல நிகழ்த்துகலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அவற்றில் சிங்கள மரபு சார்ந்த அரங்காற்றுகைகளும் கலைகளும் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்று இன்றும் அரங்கேற்றப்படுகின்றன.ஆனால் ஈழத்தமிழ் சார்ந்த நிகழ்த்துகலைகளுக்கு , போதிய சமூக அங்கீகாரமோ, பரவலாக்கமோ அவை காணவில்லை. அதிலும் சில நிகழ்த்துகலைகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்கும் குறிப்பிட்ட சமூக அந்தஸ்து கொண்டோருக்கும் வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. காலவோட்டத்தில் மிக வேகமாக அருகிவரும் இவை, இன்னும் முறைப்படி ஆவணப்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை எனலாம். அந்த வகையில், அரங்கியல்… Continue reading யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்(2004), மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்னாள் கலாசார உத்தியோகத்தரும், சமூக ஆய்வாளருமான ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள்; நூலக நிறுவனத்தில் தனது நூல்களை எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்குரிய அனுமதியை அளித்துள்ளார். இவரது நூல்களான, 1) சுவாமி விபுலானந்தரின் தொல்லியலாய்வுகள் 2) குளக்கோட்டன் தரிசனம் 3) கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள் போன்ற பல நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் அணுகிப் பயன்பெறமுடியும். கீழுள்ள இணைப்பில் அந் நூல்களையும் அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பார்வையிடலாம். 1)… Continue reading ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

Published on Author Noolaham Foundation

அழிவை எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு துணைநிற்க கூடிய ஆவணங்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எண்ணிம வடிவில் ஆவணப்படுத்துவதற்காக பிரித்தானிய நூலகத்தினால் (British Library) தொடங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தான் Endangered Archive Program (EAP). இதனடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல்வேறு நாடுகளில் EAP தொடரிலக்கத்துடன் பிரித்தானிய நூலக அனுசரணையில் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheri இலிந்து மேற்கொள்ளப்படும் EAP 458 குழுவினர் நூலக நிறுவனத்திற்கு எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல்… Continue reading பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்