நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் சிலாகிக்கப்பட்டது 96 திரைப்படம். அதன் வெற்றிக்கும் சிறப்புக்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,  எல்லோரது வாழ்க்கையிலுமே மறக்க முடியாத பள்ளிப்பருவத்தை அத்திரைப்படம் சித்தரித்திருந்த விதமே அப்படத்தை அதிக கவனிப்புக்குள்ளாக்கி இருந்தது. ஆனால் அத்திரைப்படம் வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பேயே நம் நூலகம், அத்தகைய ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பள்ளிக்காலம் என்பது எல்லோருக்கும் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்துசெல்லும் ஒன்று. வகுப்பறைகளாக, நடைபாதைகளாக, மரத்தடிகளாக, பாடசாலைகள் நம் எல்லோர் மனதிலும்… Continue reading நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு

Published on Author Noolaham Foundation

நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு   இணையத்தில் தமிழ் மொழி பயன்பாடு பல்லூடக ஆவணப்படுத்தலில் நூலக நிறுவனம் விக்கிபீடியா அறிமுகம் நேரம் : பி.ப. 02:30 – 06:00 மணி காலம் : 08.04.2017 சனிக்கிழமை இடம் : நூலக நிறுவனம் . இல 100 , ஆடியபாதம் வீதி,கொக்குவில் , யாழ்ப்பாணம் கலந்து கொள்ளவிரும்பின் உங்கள் முன்பதிவுகளை மின்னஞ்சல் மூலமாகவோ குறுந்தகவல் மூலமாகவோ விரைவில் அறியத்தரவும் உத்தமம் infittsl@gmail.com +0094 766 427… Continue reading நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு

பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் “மா.சின்னத்தம்பி” அவர்கள் தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். அவரது நூல்கள்- 1) அரச நீதி, 2) ஆசிரிய முகாமைத்துவம், 3) இலங்கையில் முகாமைத்துவக்கல்வி, 4) கல்வித்திட்டமிடல் கோட்பாடுகளும் புதிய வளர்ச்சியும், 5) இலங்கையின் கல்விச் செலவு முதலிய பல நூல்களும் நூலக நிறுவனத்தில் காணப்படுகின்றன. மேலதிக நூல்களுக்கு கீழ் உள்ள இணைப்பை பார்வையிடவும்: http://tinyurl.com/p75rxkl {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும்… Continue reading பேரா. மா.சின்னத்தம்பி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

எண்ணிம இடைவெளி

Published on Author Gopi

தொடர்பாடல், தகவல் நுட்ப வளர்ச்சியானது இலங்கை போன்ற நாடுகளிலும் அறிவுசார் அபிவிருத்திக்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. கணினி, இணையம் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பரவலாக்குவது அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. ஆயினும் தகவல் நுட்பத்தின் வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் ஒரேயளவில் கிடைப்பதில்லை. எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் கிடைப்பதிலுள்ள இந்த ஏற்றத்தாழ்வு எண்ணிம இடைவெளி (Digital divide) எனப்படுகிறது. காரணங்கள் சமூகப் பின்னணி, பொருளாதார நிலை, பால், இனம், மொழி, வாழும் பிரதேசம் போன்ற பல்வேறு காரணங்களால் எண்ணிம… Continue reading எண்ணிம இடைவெளி