கேப்பாபுலவு : நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை

Published on Author Noolaham Foundation
கேப்பாபுலவு

கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீளப்பெறுவதற்காக தன்னிச்சையாக உறுதியுடன் வயது பாரபட்ச்சமின்றி இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த நூலானது 20 நாட்கள் தாண்டிய அவர்களது அறப்போரட்ட காலத்தில் வரலாற்றுப்பதிவாக வெளிவந்துள்ளது. இதில் கேப்பாபுலவின் வரலாறு, இராணுவ ஆக்கிரமிப்பு , மக்களின் மனநிலைகளை அவரவர்களின் வார்த்தைகளிலும், அறப்போரட்ட நிகழ்வுகளை கால அட்டவணையிலும் விரிவாக பதியப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் வரலாற்றில் இவ்வாறன வரலாற்றுப்பதிவுகள் அவை நிகழும் சமகாலத்தில் எழுதப்படுவது அரிது. இந்த நூலினை நூலகத்தில் வாசிக்கலாம் http://www.noolaham.org/wiki/index.php/கேப்பாபுலவு:_நிலமீட்புக்கான_மக்கள்_போராட்டத்தின்_கதை

“மீள்பார்வை மீடியா சென்ரர்” தமது வெளியீடுகளை அணுக்கப்படுத்துவதற்கான அனுமதியினை அளித்தனர்

Published on Author Noolaham Foundation

சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நண்பர்கள் பலரும் இணைந்து கொழும்பிலிருந்து “மீள்பார்வை மீடியா சென்ரர்” (Meelparvai Media center) எனும் பதியப்பட்ட நிறுவனத்தின் ஊடாக வெளியிடும் வெளியீடுகளான மீள்பார்வை பத்திரிகை, மற்றும் அவர்களுடைய சஞ்சிகை வெளியீடுகளான 1) பயணம், 2) வைகறை, 3) சர்வதேசப்பார்வை முதலிய சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 14/09/2015 அன்று கொழும்பு 9 ல் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து… Continue reading “மீள்பார்வை மீடியா சென்ரர்” தமது வெளியீடுகளை அணுக்கப்படுத்துவதற்கான அனுமதியினை அளித்தனர்