Tamil documentation related internship opportunity at UTSC

Published on Author Noolaham Foundation

University of Toronto Scarborough Library is undertaking a Digital Tamil Studies project.  Part of the project involves multimedia documentation of Tamil folklore in Scarborough and Greater Toronto Area.  UTSC Library Digital Scholarship Unit is offering an internship opportunity via the Young Canada Works at Building Careers in Heritage  program.  You will be contributing to and… Continue reading Tamil documentation related internship opportunity at UTSC

திறந்த அணுக்க வாரம்: பேவோல் எனும் புலமை வாணிபம்

Published on Author தண்பொழிலன்

‘திறந்த அணுக்க வாரம்’ (Open Access Week) எனும் பூகோள நிகழ்வு, வெற்றிகரமாக பத்தாவது தடவையாக இவ்வாண்டு ஒக்டோபர் 22 முதல் 28 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நீங்கள் இணையப் புலமையாளர் உலகத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்றால், “திறந்த அணுக்கம்” (open access) என்ற சொல்லாடலை அடிக்கடி கடந்திருப்பீர்கள். உயர் கல்வி நிறுவகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிகழ்கின்ற புலமைசார் ஆய்வுகளை உடனடியாகவும், இலவசமாகவும் சகலரும் பயன்படுத்துமாறு இணைய உலகில் வெளியிடுவதே ‘தகவலுக்கான திறந்த அணுக்கம்’ என்பதன் பொருள். நமது… Continue reading திறந்த அணுக்க வாரம்: பேவோல் எனும் புலமை வாணிபம்

மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

Published on Author தண்பொழிலன்

ஒவ்வொரு கணப்பொழுதிலும் இணையத்தில் பெரும் எண்ணிக்கையிலான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்பனவற்றில் அறிவியல், பண்பாட்டு, அரசியல் உட்பட்ட பல துறைகளைச் சார்ந்த முக்கிய தகவல்கள் இருக்கின்றன. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, 1992 இல் ஆரம்பமான soc.culture.tamil usernet குழுமம் தொடங்கி, ஜியோசிட்டிஸ் (geocities), மன்றங்கள், வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் (blogs), அண்மைய டுவிட்டர் கீச்சுக்கள் (tweets) வரை விரிவான உள்ளடக்கம் உண்டு. ஏதேனும் ஒரு ஆய்வுப்பரப்பில், ஒரு தலைப்பை ஆய்வு… Continue reading மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

புத்தகங்களுக்கு ஒரு நாள்!

Published on Author தண்பொழிலன்

இந்த ஆண்டிற்கான உலக புத்தக தினமானது ஏப்ரல் 23, 2018 திங்கட்கிழமையன்று உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 1995இலிருந்து யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் இத்தினமானது புத்தகம், அதன் பதிப்புரிமை மற்றும்  வாசிப்பைப் பழக்கத்தை அதிகரித்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். எனவே, சில இடங்களில் இது “புத்தக பதிப்புரிமை தினம்” என்றும் அழைக்கப்படுகிறது. 1920களிலேயே ஸ்பெயினில் உலக புத்தக தினம் பற்றிய கருதுகோள் தோன்றிவிட்டது என்றாலும், 1995ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ… Continue reading புத்தகங்களுக்கு ஒரு நாள்!

திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016

Published on Author Noolaham Foundation

இந்த வாரம் (ஒக்ரோபர் 24 – 30, 2016) திறந்த அணுக்க வாரம் (Open Access Week) ஆகும்.  திறந்த அணுக்கம் என்பது அறிவு வளங்களை அனைவருக்கும் கட்டற்று கிடைக்கச் செய்தலுக்கான கொள்கையும் வழிமுறையும் ஆகும்.  திறந்த அணுக்கத்தில் அறிவு வளங்கள் கிடைப்பது கல்வி, ஆய்வு, சமூக வளர்ச்சிக்கு அவசியம் ஆகும். மொழி, கணிதம், அறிவியல், கலைகள் என்று அறிவு என்றும் கட்டற்று இருப்பதன் ஊடாகவே மனித சமூகம் வளர்சி பெறுகின்றது.  ஆனால் இந்த அறிவு வளங்களின்… Continue reading திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016

எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்

Published on Author Noolaham Foundation

‘இந்த காலத்தில் எல்லாமே கொம்பியூட்டர்தான்’ என்பதே இப்போது பலரும் உச்சரிக்கும் வசனங்களாகிப் போகுமளவுக்கு கொம்பியூட்டர் எனப்படும் கணிணியும் அதனோடு இணைந்த இணைய (இன்டர்நெட்) பாவணையும் வந்துவிட்டது. விரும்பியோ விரும்பாமலோ அந்த தொழிநுட்பம் சார்ந்து நமக்கான தெரிவுகளைச் செய்யத் தூண்டப்படுகிறோம். வீட்டுக்கு ஒரு கணிணியும் ஆளுக்கொரு தொலைபேசியும் இப்போது அத்தியாவசியமாகிவிட்டது. இணையப் பாவனை பரவலாக்கப்பட்டு கைப்பேசியிலேயேகூட இணைய வசதியைப் பெறும் நிலைமை இன்று உள்ளது. இந்த வளர்ச்சி காலகட்டத்திற்குள் நாம் எவ்வாறு நமது முன்னோக்கிய பயணத்திற்கு இந்த கணிணி… Continue reading எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்

சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தமக்குள் கொண்டிருக்கும் மரபறிவுச்செல்வங்கள் ஏராளமானவை. ஒவ்வொரு காலப்பரப்பிலும் அவை கண்டுகொள்ளப்படாமல் அழிந்தொழிந்து போகின்றன. நமக்கு முந்தைய தலை முறையினரிடம் இருந்து, நாம் பெற்றுக்கொண்டவற்றை விட இழந்தவைகள் ஏராளம். ஒவ்வொரு தலைமுறை எழுச்சியின் போதும் இந்த விபத்து நடந்துகொண்டே இருக்கின்றது. நமது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு மிகக்கவனமாக ஆவணப்படுத்தப் பட வேண்டும் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதுவரை செயலில் இறங்கி அதைச் செய்தவர்கள் மிகச்சிலரே. நேற்று… Continue reading சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்