எண்ணிம பாதுகாப்பு தினம் (‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ )

Published on Author Loashini Thiruchendooran

உலக எண்ணிமப் பாதுகாப்பு தினமானது, வருடாந்தம் நவம்பர் மாத முதலாவது வியாழக்கிழமைகளில்  கொண்டாடப்படும் தினம். இவ்வாண்டு 02ஆம் திகதி வியாழக்கிழமை உலகளாவிய ரீதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்பட்டது. எண்ணிம பாதுகாப்பு என்பது தொடர்பில் சிந்திக்க  நம்மில் பெரும்பாலோர் நேரம் செலவிடுவதில்லை, ஆனால் தனிநபர்களாகவும், சமூகமாகவும் இன்று உருவாக்கும் எண்ணிம உள்ளடக்கம் எதிர்காலத்தில் இன்னும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்த உதவுவது கட்டாயமானதாகும். இவ்வாண்டு ‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ என்ற கருப்பொருளைக் கொண்ட இத்தினமானது எண்னிமப் பாதுகாப்பில் ஈடுபடும்… Continue reading எண்ணிம பாதுகாப்பு தினம் (‘எண்ணிம பாதுகாப்பு: ஒரு ஒருங்கிணைந்த முயற்சி’ )

Noolaham Foundation preserves the past to enrich the future – lankabusinessonline.com

Published on Author Noolaham Foundation

எழுத்தாளர், ஊடகவியலாளர் ஜெகன் அருளையா அவர்கள் “Noolaham Foundation preserves the past to enrich the future” என்ற ஒரு விரிவான ஆங்கிலக் கட்டுரையை லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் செய்தித் தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இக் கட்டுரை நூலக நிறுவனத்தின் நோக்கங்கள், விழுமியங்கள், பணிகள், தேவைகள், எதிர்காலத் திட்டம் உட்பட்ட தகவல்களைப் பகிர்கிறது.  பொறுமையாகத் தகவல்களைப் பெற்று தொகுத்து வெளியிட்ட ஜெகன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

பன்மொழி ஆதரவுடன் ஐலண்டோரா 8 வெளியிடப்பட்டது

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணகத் தளம் கட்டற்ற மென்பொருளான ஐலண்டோரா 7 இல் இயங்குகிறது.  ஐலண்டோராவின் அடுத்த தலைமுறை வெளியீடே ஐலன்டோரா 8 ஆகும்.  இது புதிய கட்டமைப்புக்களையும் (architecture) கூறுகளையும் (features) கொண்ட ஒரு பாரிய முன்னெடுப்பு.  குறிப்பாக இணைப்புத் தரவுவினை (Linked Data) உருவாக்கும் (create), வெளியிடும் (publish) வசதியுடன் இது வெளிவருகிறது.  இது தொடர்பான அறிவிப்பினை இங்கு காணலாம். ஐலன்டோராவின் இடைமுகம் அல்லது முகப்பு முனை (front end) டுரூப்பல் 8 ஆல் ஆனது. … Continue reading பன்மொழி ஆதரவுடன் ஐலண்டோரா 8 வெளியிடப்பட்டது

உலக எண்ணிமப் பாதுகாப்பு தினம்

Published on Author தண்பொழிலன்

உலக எண்ணிமப் பாதுகாப்பு தினமானது, வருடாந்தம் நவம்பர் மாத இறுதி வியாழக்கிழமைகளில்  கொண்டாடப்படும் தினம். இவ்வாண்டு 29ஆம் திகதி வியாழக்கிழமை (இன்று) உலகளாவிய ரீதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.   எண்ணிமப் பாதுகாப்பு (digital preservation) என்பது, வணிகம், கொள்கை வகுப்பு, தனிப்பட்ட ஒழுகலாறுகள் என்பவை உட்பட  சமூகத்தின் அனைத்து அம்சங்களோடும் இரண்டறக் கலந்தது. சமகாலக் கணினி யுகத்தை வரையறுக்கும் எண்ணிமத் தொழிநுட்பங்கள், பரலவான, எங்கும் வியாபித்திருக்கின்ற. தொடர்ச்சியாக மாற்றமடைகின்ற அம்சங்களாக அமைந்திருக்கின்றன. மருத்துவம், விஞ்ஞானம், சட்டம்,  போன்ற… Continue reading உலக எண்ணிமப் பாதுகாப்பு தினம்

Toronto – Jaffna Partnership – Library Initiative Launch

Toronto mayor John Tory and Northern province chief minister Justice C. V. Vigneswaran signed a Memorandum of Understanding last year. Economic development, education, governance and library services were selected as key areas for cooperation. The focus of library services as one of the four core areas demonstrate the critical role libraries can play in reconstruction… Continue reading Toronto – Jaffna Partnership – Library Initiative Launch

பல்லூடக ஆவணக வளர்ச்சி

Published on Author Noolaham Foundation

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பல்லூடக ஆவணகம் பல பரிணாமங்களில் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஜெயரூபி சிவபாலன், குலசிங்கம் வசீகரன், இ. மயூரநாதன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், பிரபாகர் நடராசா, தமிழினி, ச. சாந்தன் உட்பட்ட பல பங்களிப்பாளர்களின் தன்னார்வப் பங்களிப்பால் நூலக ஒளிப்படச் சேகரம் 1,100 படங்களை தாண்டியுள்ளது.  இந்தப் படங்கள் சமூக வரலாற்று கல்வி முக்கியத்துவம் வாந்த படங்கள்.  பெரும்பாலானவை ஆவணக தரத்தில் (archival quality) அமைந்தவை.  இவர்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும். இலங்கைத் தமிழ்… Continue reading பல்லூடக ஆவணக வளர்ச்சி

நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. * ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born… Continue reading நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு