யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

Published on Author Noolaham Foundation

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி யாழில் ஒக்ரோபர் 19, 20 ம் திகதிகளில் சிறப்பான கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.  இந்தியாவில் இருந்து 20 மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டது இதன் சிறப்பு ஆகும்.  தமிழ் விக்கிப்பீடியா உலகத் தமிழ் பேசும் சமூகங்களின் ஒர் இணைப்புத் தளமாக தொடர்ந்து செயற்பட்டு, அந்த உறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது. 2003 காலப் பகுதியில் திறந்த இணையம் (Open Web) பலமாக இருந்தது.  தமிழ் வலைப்பதிவுகள், மன்றங்கள்,… Continue reading யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

யாழில் SETME2018 ஆய்வரங்கு

Published on Author தண்பொழிலன்

“தொழிநுட்ப உலகில், எதிர்வரும் காலம், நான்காவது கைத்தொழில் புரட்சிக்காலமாக இனங்காணப்படுகின்றது. இக்காலத்தில், இலத்திரனியலின் செல்வாக்கு மேலும் வீரியமாக எமது வாழ்க்கையைப் புரட்டிப்போடுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்வுகூறப்படுகிறது. உதாரணமாக புதிய, முன்னெப்போதும் பெரிதும் அறிந்திராத the Internet of Things, autonomous vehicles, 3-D printing, nanotechnology, biotechnology, materials science, energy storage, and quantum computing போன்ற தொழில்நுட்பங்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன. இவை எப்போதுமில்லாத புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அவற்றுக்குத் தேவையான, எதிர்ப்பார்க்கப்படும் திறன்களும்… Continue reading யாழில் SETME2018 ஆய்வரங்கு

மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை

Published on Author தண்பொழிலன்

2018 மார்ச் 31ஆம் திகதி சனிக்கிழமையன்று, நூலகம் நிறுவனமும் விக்கிப்பீடியாவும் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறையானது, மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் கணினிக்கூடத்தில் இடம்பெற்றது. திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.பிரசாத் சொக்கலிங்கம், திரு.வி.துலாஞ்சனன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பங்காற்றிய இப்பட்டறையில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த திரு.மயூரநாதன் கலந்துகொண்டு, பெறுமதியான பல கருத்துக்களை முன்வைத்தார். உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திரு. செல்வரத்தினம் ஜெயபாலன் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல், நூலகம் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் வடக்கு – கிழக்கு … Continue reading மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை

2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் முதன்மை முடிவெடுக்கும் சபை வழிகாட்டுநர் சபை (Regulatory Board) ஆகும். இந்தச் சபை ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவு (Annual Plan and Budget) நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பான முடிவெடுத்தல் (Decision Making) வளந் திரட்டுதல் (Resource Mobilization) வியூகத் திட்டமிடல் (Strategic Planning) செயற்திட்டங்கள்/செயலாக்கங்கள் மேற்பார்வை (Process Oversight) உட்பட்ட பணிகளுக்குப் பொறுப்பானது. இந்தச் சபை சுமார் மாதம் இருமுறை அல்லது ஆண்டுக்கு 20-25 வரையான சந்திப்புக்களை மேற்கொள்ளும். இந்தச் சந்திப்புக்கள் நடைபெறும்… Continue reading 2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி

Published on Author Noolaham Foundation

யாழ்/ தென்மராட்சி கல்வி வலயத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தென்மராட்சி கல்வி வலய பாடசாலை நூலகர்களுக்கான செயலமர்வு 04/07/2015 அன்று காலை 8.00மணி முதல் மாலை 4.30 மணி வரை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. அந்நிகழ்வில் வளவாளர்களாக நூலக நிறுவன அலுவலர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன் நூலக தன்னியக்கமாக்கல் மற்றும் எண்ணிம நூலகம் தொடர்பில் பூரண விளக்கத்தினை அளித்திருந்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தென்மராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் பங்குபற்றி பயன்பெற்றதுடன் நூலக நிறுவனத்தினரின் செயற்றிட்டங்கள் தொடர்பில் தமது ஆதரவினை… Continue reading நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி