திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 23 – 29, 2023

Published on Author Loashini Thiruchendooran

திறந்த அணுக்க வாரம் என்பது வருடாந்திர உலகளாவிய நிகழ்வாகும். இது கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தில் திறந்த அணுகலை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. திறந்த அணுக்கம் என்பது ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் கல்வி சார் வளங்கள் என்பவற்றினை நிதி, சட்ட அல்லது தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. திறந்த அணுக்க வாரம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் நடைபெறுவதுடன் திறந்த அணுக்கத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை… Continue reading திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 23 – 29, 2023

நூல்களால் கட்டும் தேசம்

Published on Author Safna Iqbal

  ‘நூல்களால் கட்டும் தேசம்’ எனும் தலைப்பில் அமையும் இக் கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகையின் 2020, ஏப்ரல் வெளியீட்டில் (பக்கங்கள் 92-96) பிரசுரமாகியுள்ளது. எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் மதிப்பிட்டு எழுதும் கட்டுரைகளுக்கு மாறாக இலக்கியச் செயற்பாட்டாளர்களின் வரலாற்று வகிபாகத்தைப் பத்மநாப ஐயரை முன்நிறுத்தி ஆராய்கிறது. பண்பாட்டு விடுதலைக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தில் எழுத்தரசியலின் முக்கியத்துவத்துவத்தினை உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளின் பின்னணியில் நோக்கி, யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்புக்குப் பின்னர் நூலகப் பண்பாட்டு மேலெழுகையிலும் தமிழ்த்… Continue reading நூல்களால் கட்டும் தேசம்

திறந்த அணுக்க வாரம்: பேவோல் எனும் புலமை வாணிபம்

Published on Author தண்பொழிலன்

‘திறந்த அணுக்க வாரம்’ (Open Access Week) எனும் பூகோள நிகழ்வு, வெற்றிகரமாக பத்தாவது தடவையாக இவ்வாண்டு ஒக்டோபர் 22 முதல் 28 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நீங்கள் இணையப் புலமையாளர் உலகத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்றால், “திறந்த அணுக்கம்” (open access) என்ற சொல்லாடலை அடிக்கடி கடந்திருப்பீர்கள். உயர் கல்வி நிறுவகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிகழ்கின்ற புலமைசார் ஆய்வுகளை உடனடியாகவும், இலவசமாகவும் சகலரும் பயன்படுத்துமாறு இணைய உலகில் வெளியிடுவதே ‘தகவலுக்கான திறந்த அணுக்கம்’ என்பதன் பொருள். நமது… Continue reading திறந்த அணுக்க வாரம்: பேவோல் எனும் புலமை வாணிபம்

கனடாவில் “கலையரசி 2018”

Published on Author தண்பொழிலன்

கனடாவில் இயங்கிவரும் யாழ் இந்துக்கல்லூரி சங்கத்தின் “கலையரசி 2018” நிகழ்வானது, “எமது கலாசாரங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளுடன், எதிர்வரும் 7 ஒக்டோபர் 2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற இருக்கின்றது. கனடிய நேரம் மாலை 5.31 மணியளவில் பிளாட்டோ மார்கம் கலையரங்கில் இந்நிகழ்வு இடம்பெறும்.   யாழ் இந்துக்கல்லூரி சமூகமும் உள்ளூர்க்கலைஞர்களும் இணைந்து நடத்த இருக்கும் இந்த இயல் – இசை – நாடக விழாவில், வர்ண இராமேஸ்வரனின் திரை இசை ராகங்கள், ஹரிணியின் இன்னிசை, சண்முகலிங்கம் குழுவினரின்… Continue reading கனடாவில் “கலையரசி 2018”

மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

Published on Author தண்பொழிலன்

ஒவ்வொரு கணப்பொழுதிலும் இணையத்தில் பெரும் எண்ணிக்கையிலான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்பனவற்றில் அறிவியல், பண்பாட்டு, அரசியல் உட்பட்ட பல துறைகளைச் சார்ந்த முக்கிய தகவல்கள் இருக்கின்றன. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, 1992 இல் ஆரம்பமான soc.culture.tamil usernet குழுமம் தொடங்கி, ஜியோசிட்டிஸ் (geocities), மன்றங்கள், வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் (blogs), அண்மைய டுவிட்டர் கீச்சுக்கள் (tweets) வரை விரிவான உள்ளடக்கம் உண்டு. ஏதேனும் ஒரு ஆய்வுப்பரப்பில், ஒரு தலைப்பை ஆய்வு… Continue reading மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து கடந்த சனிக்கிழமையன்று (16 ஜூன் 2018) நடத்திய பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருந்தது. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்களால், பயிற்சிக்கு வந்திருந்த ஆர்வலர்களுக்கு, பல்வேறு நிலைகளில் (நல்ல நிலையில் உள்ளவை, கறையான் அரித்தவை, தெளிவானவை, தெளிவற்றவை) கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன. ஓலைச்சுவடிகளைத் தூய்மைப்படுத்தும் வழிவகைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களின் பின்னர் ஓலைச்சுவடிகளை வாசிக்கும் வழிமுறைகளும்… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணக வலைத்தளத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஒலிப் பதிவுகளின் எண்ணிக்கை இன்று 100 இனைக் கடந்துள்ளது. நூல் வெளியீடுகளின் ஒலிப்பதிவுகள், மேடைப் பேச்சுக்கள், வாய்மொழி வரலாறுகள், மெல்லிசைப் பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் எனப் பல்வேறு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.   http://aavanaham.org/islandora/object/islandora:audio_collection       நூலக பல்லூடக ஆவணகத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஆக்கங்களை noolahamcollections@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.      இந்தத் தளத்தில் நீங்களும் ஆக்கங்களை அனுமதி பெற்று பதிவேற்ற… Continue reading பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்