நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் சிலாகிக்கப்பட்டது 96 திரைப்படம். அதன் வெற்றிக்கும் சிறப்புக்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,  எல்லோரது வாழ்க்கையிலுமே மறக்க முடியாத பள்ளிப்பருவத்தை அத்திரைப்படம் சித்தரித்திருந்த விதமே அப்படத்தை அதிக கவனிப்புக்குள்ளாக்கி இருந்தது. ஆனால் அத்திரைப்படம் வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பேயே நம் நூலகம், அத்தகைய ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பள்ளிக்காலம் என்பது எல்லோருக்கும் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்துசெல்லும் ஒன்று. வகுப்பறைகளாக, நடைபாதைகளாக, மரத்தடிகளாக, பாடசாலைகள் நம் எல்லோர் மனதிலும்… Continue reading நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது, வெற்றிகரமாக தனது 14 ஆவது ஆண்டுக்குள் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், கடந்த 2017இல் சிறப்பாகச் செய்துமுடித்த முக்கியமான மைல்கற்களையும், அடுத்த ஆண்டுக்காகவும் தொடரும் நடவடிக்கைகளையும் கவனப்படுத்த விரும்புகின்றது. நூலகத்தின் 2017ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்ட முதன்மை அடைவுகளாக பின்வருவனவற்றைப் பட்டியல் படுத்தலாம். 50,000 எழுத்தாவணங்கள் இலக்கைத் தாண்டியது – எண்ணிம நூலகம் ஆவணகத் தளம் வெளியீடும் சுமார் 2,500 பல்லூடகங்களின் சேமிப்பும் 70 இற்கும் மேற்பட்ட வாய்மொழி வரலாறுகள் ஈழத்து நூற்பட்டியலை எண்ணிமப்படுத்தல் – 11,500 நூல் விபரங்கள் மலையகம், திருகோணமலை,… Continue reading 2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இசைநாடகப்பள்ளி; மட்டக்களப்பின் குருக்கள் மடத்தில் இருந்து கீதா கெளரிபாலன் என்பவரால் கடந்த இருஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இசை மற்றும் நாடகம் முதலியவற்றினை தொடர்ச்சியாக பேணும் நோக்குடனும் புதியதோர் தலைமுறையினை இதன்பால் வளர்த்தெடுக்கும் நோக்குடனும் தொடர்ந்து இயங்கிவருகின்றது. இவ் இசைநாடகப் பள்ளியின் வெளியீடாக ‘வியளம்’ எனும் சஞ்சிகை சிறுவர்கள், இளையோர்கள் போன்றோரின் ஆற்றலுக்கு களமமைக்கும் விதமாக அண்மைக்காலமாக வெளியிடப்படுகின்றது. இச் சஞ்சிகைகள் நூலக நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பிரதிகள் மற்றும் அனுமதிகள் போன்றவற்றினை ‘இசைநாடகப் பள்ளியின்’ நிறுவனரும்,… Continue reading நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

நூலகத்தில் திருமறைக் கலாமன்ற வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் அரங்கவியல் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துள்ள “திருமறைக்கலாமன்றத்தின்” வெளியீடுகளை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிட முடியும். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/nrdegj9 கலைமுகம் இதழ்கள்: http://tinyurl.com/Kalaimugam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

நூலகத்தில் ஜீவநதி மாத இதழ்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழான ‘ஜீவநதி’ இதழ்கள் நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு பகிரப்படுகின்றன. ஜீவநதி இதழின் ஆசிரியர் திரு. க. பரணிதரன் அவர்கள் இதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளதுடன் ஜீவநதி இதழ்களையும் நூலக நிறுவனத்துக்கு அளித்துவருகின்றார். மேலும் ஜீவநதி வெளியீடுகள் அனைத்தையும் நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். இணைப்பில் நூல்கள்: http://tinyurl.com/p2ze6pv {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் ஜீவநதி மாத இதழ்

வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

Published on Author Noolaham Foundation

வடமாகாண சூழலியல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் திரு. பொன்னுத்துரை ஐங்கரநேசன், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக வலுச்சேர்க்கும் வகையில் சில உபகரணங்களை அவரது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்திடம் 23/09/2015 அன்று கையளித்தார். மேலும் அவர் எழுதிய நூல்களையும், 1993 இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் வெளியாகிய அவரது “நங்கூரம்” சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினையும் 2015/05/22 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நூலக… Continue reading வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

மகுடம் வெளியீடுகளை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதி பெறப்பட்டது

Published on Author Noolaham Foundation

‘மகுடம்’ இதழ் 2012ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து ஆண்டுக்கு நான்கு இதழ்களாக கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து கலை இலக்கிய சமூக பண்பாட்டுக்கான காலாண்டிதழாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. மகுடம் இதழின் ஆசிரியர் திரு வி.மைக்கல் கொலின் அவர்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் மகுடம் காலாண்டிதழ்களையும், மகுடம் வெளியீட்டால் வெளியிடப்படும் இதர வெளியீடுகளையும் ஆவணப்படுத்தும் அனுமதியினை அளித்திருந்தார். நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ‘இதழ்கள்’ பகுதியினூடாக மகுடம் சஞ்சிகைகளையும் இன்னும் பிற நூல்களையும் உலகலாவிய ரீதியில் தொடர்ச்சியாக அணுகிப் பயன்பெறமுடியும்.… Continue reading மகுடம் வெளியீடுகளை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதி பெறப்பட்டது