2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது, வெற்றிகரமாக தனது 14 ஆவது ஆண்டுக்குள் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், கடந்த 2017இல் சிறப்பாகச் செய்துமுடித்த முக்கியமான மைல்கற்களையும், அடுத்த ஆண்டுக்காகவும் தொடரும் நடவடிக்கைகளையும் கவனப்படுத்த விரும்புகின்றது. நூலகத்தின் 2017ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்ட முதன்மை அடைவுகளாக பின்வருவனவற்றைப் பட்டியல் படுத்தலாம். 50,000 எழுத்தாவணங்கள் இலக்கைத் தாண்டியது – எண்ணிம நூலகம் ஆவணகத் தளம் வெளியீடும் சுமார் 2,500 பல்லூடகங்களின் சேமிப்பும் 70 இற்கும் மேற்பட்ட வாய்மொழி வரலாறுகள் ஈழத்து நூற்பட்டியலை எண்ணிமப்படுத்தல் – 11,500 நூல் விபரங்கள் மலையகம், திருகோணமலை,… Continue reading 2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. * ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born… Continue reading நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

நூல் தேட்டம் செல்வராஜா என அனைவராலும் அறியப்படும் திரு. நடராஜா செல்வராஜா நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்குப் பலகாலமாகப் பங்களித்து வருபவர். அவ்வாறான நேரடிச் செயற்பாட்டாளர்கள் என்றாலும் ஒரு நிறுவனமாக முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு எழுத்துமூல அனுமதிகளை நூலக நிறுவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் செல்வராஜா அண்மையில் நூல் தேட்டப் பணிகளுக்காக இலங்கை வந்திருந்தபோது தனது அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். ஈழத்து நூலகவியலாளரில் மிக முக்கிய இடம் வகிக்கும் செல்வராஜா ஓர் எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளரும் ஆவார். நூல்… Continue reading நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்