ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களை இழந்தோம்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகவும் நமது நூலக நிறுவனத்தின் (Noolaham Foundation) ஒரு தன்னார்வப் பணிப்பாளராகவும் பங்காற்றிய சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள்  25 மார்கழி 2019 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானர் என்ற துயரச்செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றோம். நூல்கள், நூலகங்கள், நூலகவியல் துறையை நெருக்கமாக ஆழமாக நேசித்த, சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகரும் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் அமைப்பாளரும் (Founder, Foundation for Library Awareness) அறிதூண்டல் மையத்தின் இயக்குநரும் (Director, Knowledge Stimulation… Continue reading ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களை இழந்தோம்

அனைவருக்காகவும் நூலகங்கள்! – ஒரு படக்காட்சி

Published on Author தண்பொழிலன்

பால், இனம், மதம், வயது, உடல் இயலுமை, வர்க்கம் ஆகிய அனைத்து பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை நூலகங்கள். அனைவருடனும் பகிர்வையும், இணக்கத்தையும் பேணுவதையே அவை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். இதை வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ரெபேக்கா மெக்கோர்கிண்டேல் (Rebecca McCorkindale) வெளியிட்ட சிறுமவியல் (minimalist) படங்கள், உலகில் பலரின் கவனத்தையும் கவர்ந்தன. ரெபேக்கா அமெரிக்காவின் Gretna, Nebraska என்ற ஒரு சிறிய ஊரில் நூலகராகப் பணியாற்றுபவர். “அனைவருக்காகவும் நூலகங்கள்” (Libraries Are For Everyone) என்ற தொனிப்பொருளில் இவர் வரைந்த… Continue reading அனைவருக்காகவும் நூலகங்கள்! – ஒரு படக்காட்சி

நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

நூல் தேட்டம் செல்வராஜா என அனைவராலும் அறியப்படும் திரு. நடராஜா செல்வராஜா நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்குப் பலகாலமாகப் பங்களித்து வருபவர். அவ்வாறான நேரடிச் செயற்பாட்டாளர்கள் என்றாலும் ஒரு நிறுவனமாக முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு எழுத்துமூல அனுமதிகளை நூலக நிறுவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் செல்வராஜா அண்மையில் நூல் தேட்டப் பணிகளுக்காக இலங்கை வந்திருந்தபோது தனது அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். ஈழத்து நூலகவியலாளரில் மிக முக்கிய இடம் வகிக்கும் செல்வராஜா ஓர் எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளரும் ஆவார். நூல்… Continue reading நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்