கனடாவில் “கலையரசி 2018”

Published on Author தண்பொழிலன்

கனடாவில் இயங்கிவரும் யாழ் இந்துக்கல்லூரி சங்கத்தின் “கலையரசி 2018” நிகழ்வானது, “எமது கலாசாரங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளுடன், எதிர்வரும் 7 ஒக்டோபர் 2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற இருக்கின்றது. கனடிய நேரம் மாலை 5.31 மணியளவில் பிளாட்டோ மார்கம் கலையரங்கில் இந்நிகழ்வு இடம்பெறும்.   யாழ் இந்துக்கல்லூரி சமூகமும் உள்ளூர்க்கலைஞர்களும் இணைந்து நடத்த இருக்கும் இந்த இயல் – இசை – நாடக விழாவில், வர்ண இராமேஸ்வரனின் திரை இசை ராகங்கள், ஹரிணியின் இன்னிசை, சண்முகலிங்கம் குழுவினரின்… Continue reading கனடாவில் “கலையரசி 2018”

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து கடந்த சனிக்கிழமையன்று (16 ஜூன் 2018) நடத்திய பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருந்தது. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்களால், பயிற்சிக்கு வந்திருந்த ஆர்வலர்களுக்கு, பல்வேறு நிலைகளில் (நல்ல நிலையில் உள்ளவை, கறையான் அரித்தவை, தெளிவானவை, தெளிவற்றவை) கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன. ஓலைச்சுவடிகளைத் தூய்மைப்படுத்தும் வழிவகைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களின் பின்னர் ஓலைச்சுவடிகளை வாசிக்கும் வழிமுறைகளும்… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

Published on Author Noolaham Foundation

ஈழத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தலில் விரிவான ஈடுபாடும், அனுபவமும், ஆற்றலும் உள்ள மூன்று புதியவர்கள் நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையில் தெரிவுசெய்யப்பட்டு இணைந்துள்ளார்கள்.  அவர்களை நாம் அன்புடன் வரவேற்கிறோம். இ. மயூரநாதன் இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) முன்னோடிப் பங்களிப்பாளர் ஆவார். இலங்கையில் வண்ணார்பண்ணையில் பிறந்து, கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுங்காலம் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்று யாழில் மீள் குடியேறியுள்ளார். 2003 ஆம் ஆன்று தமிழ் விக்கிப்பீடியாவைத்… Continue reading நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

Published on Author Noolaham Foundation

உளநல ஆலோசனைகள், பயிற்சிகள், உளவள கற்கை நெறிகள் தொடர்பில் பல உளவள வைத்திய நிபூணர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்டகாலமாக சேவையாற்றிவரும் சாந்திகம் நிலையத்தில் (Shanthiham-Association for health and Counselling) அந் நிறுவன இயக்குணர் ஜே.தற்பனன் மற்றும் நிறுவன அலுவலர்கள், மூத்த உளவள வைத்திய நிபூணர் வைத்திய கலாநிதி.தயா சோமசுந்தரம் முதலியோருடன் 05/12/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகர் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பில் ஓர் சிறு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்… Continue reading சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இசைநாடகப்பள்ளி; மட்டக்களப்பின் குருக்கள் மடத்தில் இருந்து கீதா கெளரிபாலன் என்பவரால் கடந்த இருஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இசை மற்றும் நாடகம் முதலியவற்றினை தொடர்ச்சியாக பேணும் நோக்குடனும் புதியதோர் தலைமுறையினை இதன்பால் வளர்த்தெடுக்கும் நோக்குடனும் தொடர்ந்து இயங்கிவருகின்றது. இவ் இசைநாடகப் பள்ளியின் வெளியீடாக ‘வியளம்’ எனும் சஞ்சிகை சிறுவர்கள், இளையோர்கள் போன்றோரின் ஆற்றலுக்கு களமமைக்கும் விதமாக அண்மைக்காலமாக வெளியிடப்படுகின்றது. இச் சஞ்சிகைகள் நூலக நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பிரதிகள் மற்றும் அனுமதிகள் போன்றவற்றினை ‘இசைநாடகப் பள்ளியின்’ நிறுவனரும்,… Continue reading நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

நூலகத்தில் திருமறைக் கலாமன்ற வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் அரங்கவியல் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துள்ள “திருமறைக்கலாமன்றத்தின்” வெளியீடுகளை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிட முடியும். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/nrdegj9 கலைமுகம் இதழ்கள்: http://tinyurl.com/Kalaimugam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

“சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகள் யாவற்றையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதி ‘சூரியா’ நிலையத்தினால் 30-06-2015 அன்று லேடி மன்னிங் றைவ், மட்டக்களப்பில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகரிடம் கையளிக்கப்பட்டது. கிழக்கிலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் தொடர்பான முன்னேற்றம், அபிவிருத்தியில் பல பெண்கள் மற்றும் புத்தியீவிகளின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் ‘சூரியா’ நிலையம் பல்வேறு பெண்ணியம் சார்ந்த வெளியீடுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் பெண்ணியம் சார்ந்து… Continue reading “சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்