பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணக வலைத்தளத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஒலிப் பதிவுகளின் எண்ணிக்கை இன்று 100 இனைக் கடந்துள்ளது. நூல் வெளியீடுகளின் ஒலிப்பதிவுகள், மேடைப் பேச்சுக்கள், வாய்மொழி வரலாறுகள், மெல்லிசைப் பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் எனப் பல்வேறு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.   http://aavanaham.org/islandora/object/islandora:audio_collection       நூலக பல்லூடக ஆவணகத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஆக்கங்களை noolahamcollections@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.      இந்தத் தளத்தில் நீங்களும் ஆக்கங்களை அனுமதி பெற்று பதிவேற்ற… Continue reading பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்

நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

“தினப்புயல்” வாரப்பத்திரிகை; வன்னிமண்ணிலிருந்து 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.  இப்பத்திரிகைகளின் ஆரம்ப வெளியீடுகள் முதல் அனைத்து வெளியீடுகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தினூடாக இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதியினை “தினப்புயல்” இயக்குணரும், முன்னணி ஊடகவியலாளரும், இரணியன் எனும் புனைபெயரில் ஊடகங்களில் எழுதிவரும் சக்திவேல் பிள்ளை பிரகாஷ் அவர்கள் நூலக நிறுவன தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம், வவுனியாவில் தேக்கவத்தையில் அமைந்துள்ள “தினப்புயல்”… Continue reading நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

நூலகத்தில் வலம்புரி நாளிதழ்

Published on Author Noolaham Foundation

பதினைந்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வலம்புரிப் பத்திரிகையானது 1999ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இற்றை வரை சிறப்பான செய்திப்பதிவுகளை மேற்கொண்டுவரும் ஓர் தினசரி செய்திப் பத்திரிகை ஆகும். மேலும் இலங்கையின் வடபகுதி ஊடகங்களில் பதினைந்து ஆண்டுகால சிறப்பான செய்திப்பதிவுகள் அடங்கிய வரலாற்றுப் பின்புலத்தினை கொண்ட இப்பத்திரிகையானது தனது ஆரம்பகால வெளியீடுகள் உட்பட அனைத்து வெளியீடுகளையும் இலங்கை தமிழ் பேசும் சமூகத்தின் எண்ணிம ஆவணக்காப்பகமான நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தி உலகலாவிய ரீதியில் திறந்த அணுக்கத்தில் பகிரவுள்ளது. நூலக… Continue reading நூலகத்தில் வலம்புரி நாளிதழ்

நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

அண்மைக்காலமாக யாழில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ‘தினச்செய்தி’ வாரப்பத்திரிகைகளை நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கு, அதன் தலைமை ஆசிரியரும், ஏசியன் ரிபீயூன் (Asian Tribune) செய்தித்தளத்தின் தலைமை ஆசிரியருமான கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இணங்கியதுடன், தினச்செய்தியின் ஆரம்ப வெளியீடுகளை நிறுவனத்திடம் கையளித்தார். 15/10/2015 அன்று அவரது தினச்செய்தி பணிமனையில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகர் மற்றும் நூலக நிறுவனத்தின் தன்னார்வலருடனும் இடம்பெற்ற இச் சந்திப்பிலேயே கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இவ் இணக்கத்தினை தெருவித்திருந்ததுடன் அவரது எழுத்தில் வெளியான இரு நூல்களையும்… Continue reading நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை

மகுடம் வெளியீடுகளை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதி பெறப்பட்டது

Published on Author Noolaham Foundation

‘மகுடம்’ இதழ் 2012ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து ஆண்டுக்கு நான்கு இதழ்களாக கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து கலை இலக்கிய சமூக பண்பாட்டுக்கான காலாண்டிதழாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. மகுடம் இதழின் ஆசிரியர் திரு வி.மைக்கல் கொலின் அவர்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் மகுடம் காலாண்டிதழ்களையும், மகுடம் வெளியீட்டால் வெளியிடப்படும் இதர வெளியீடுகளையும் ஆவணப்படுத்தும் அனுமதியினை அளித்திருந்தார். நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ‘இதழ்கள்’ பகுதியினூடாக மகுடம் சஞ்சிகைகளையும் இன்னும் பிற நூல்களையும் உலகலாவிய ரீதியில் தொடர்ச்சியாக அணுகிப் பயன்பெறமுடியும்.… Continue reading மகுடம் வெளியீடுகளை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதி பெறப்பட்டது

“தீபம்” பத்திரிகை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து, வாரம் ஒருமுறைவெளிவருகின்ற “தீபம்” பத்திரிகையினை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை 01/10/2015 அன்று அதன் ஆசிரியர் நூலக நிறுவனத்திடம் கையளித்தார். விரைவில் நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் “தீபம்” பத்திரிகையின் முழு வெளியீடுகளையும் தொடர்ச்சியாக அணுகிப் பயன் பெறமுடியும். {{{உங்களது ஆவணங்களையும் நூலக நிறுவனத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி உலகம் முழுவதும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கு தொடர்புகொள்ளவும். +94 112 363 261/ +94 212… Continue reading “தீபம்” பத்திரிகை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது

Published on Author Noolaham Foundation

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து மாதம் ஒருமுறை பிரசுரிக்கப்பட்டு நாட்டின் பல பாகங்களிலும் விற்பனைக்குள்ளாகும் Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் தொடர்ச்சியாக எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 22/09/2013 அன்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள Tamil CNN இன் காரியாலயத்தில் வைத்து அதன் ஆசிரியர் நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் கையளித்தார். மேலும் இதுவரை வெளியான “தாய்வீடு” சஞ்சிகை வெளியீடுகளையும் இந்நிகழ்வில் நூலக நிறுவனத்திடம் Tamil CNN… Continue reading Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது