யாழ் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் கடந்த பதினொரு ஆண்டுகளாக இலங்கையின் பல்வேறு எழுத்தாளர்களினதும், நிறுவனங்களினதும் 15,000 க்கும் அதிகமான வெளியீடுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இச்செயற்பாடுகளின் மேலுமொரு மைல்கல்லாக 2014 ஆம் ஆண்டு “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் நூறுக்கும் மேற்பட்ட வெளியீடுகளினை மின்வருடி ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டின் ஆரம்பத்தில் முடிவுக்கு வந்திருந்தது. அவ்வெளியீடுகளை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலக வலைத்தளத்தில் திறந்த வாசிப்பிற்கு அனுமதிப்பதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 21/06/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நூலக நிறுவன யாழ்ப்பாணக்… Continue reading யாழ் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி

Published on Author Noolaham Foundation

யாழ்/ தென்மராட்சி கல்வி வலயத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தென்மராட்சி கல்வி வலய பாடசாலை நூலகர்களுக்கான செயலமர்வு 04/07/2015 அன்று காலை 8.00மணி முதல் மாலை 4.30 மணி வரை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. அந்நிகழ்வில் வளவாளர்களாக நூலக நிறுவன அலுவலர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன் நூலக தன்னியக்கமாக்கல் மற்றும் எண்ணிம நூலகம் தொடர்பில் பூரண விளக்கத்தினை அளித்திருந்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தென்மராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் பங்குபற்றி பயன்பெற்றதுடன் நூலக நிறுவனத்தினரின் செயற்றிட்டங்கள் தொடர்பில் தமது ஆதரவினை… Continue reading நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி