கே.ஸ்.சிவகுமாரன் தமது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கியுள்ளார்

Published on Author Noolaham Foundation

ஈழத்தின் மூத்த பல்துறை எழுத்தாளரும், இலக்கியவாதியும், நூலக நிறுவனத்துடன் இணைந்து இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்துதல் தொடர்பான செயற்பாடுகளுக்கு பலகாலமாக வலுச்சேர்த்து வருபவருமான “கே.ஸ்.சிவகுமாரன்” அவர்கள் தமது எழுத்துக்களை நூலக நிறுவனத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார். கே.ஸ். சிவகுமாரன் அவர்களின் எழுத்தில் அமைந்த இலக்கிய திறனாய்வு பற்றிய நூல்கள், சிறுகதைகள், சினிமா பற்றிய நூல்கள் போன்ற இன்னோரன்ன பலநூல்களும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. {{உலகலாவிய… Continue reading கே.ஸ்.சிவகுமாரன் தமது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கியுள்ளார்

ஒளவை விக்னேஸ்வரன்” (ஒளவை) தனது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

Published on Author Noolaham Foundation

சமகால ஈழத்தின் புலம்பெயர் பெண் எழுத்தாளரான “ஒளவை விக்னேஸ்வரன்” (ஒளவை) தனது எழுத்துக்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை 23/09/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தார். {{ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களினையும் எண்ணிம ஆவணப்படுத்தி நூலக நிறுவனத்தினூடாக பகிர்வதற்கும் சமூகம் சார்ந்து ஆவணப்படுத்தலை மேற்கொள்வதற்கும் தொடர்புகொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது

Published on Author Noolaham Foundation

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து மாதம் ஒருமுறை பிரசுரிக்கப்பட்டு நாட்டின் பல பாகங்களிலும் விற்பனைக்குள்ளாகும் Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் தொடர்ச்சியாக எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 22/09/2013 அன்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள Tamil CNN இன் காரியாலயத்தில் வைத்து அதன் ஆசிரியர் நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் கையளித்தார். மேலும் இதுவரை வெளியான “தாய்வீடு” சஞ்சிகை வெளியீடுகளையும் இந்நிகழ்வில் நூலக நிறுவனத்திடம் Tamil CNN… Continue reading Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது

“மீள்பார்வை மீடியா சென்ரர்” தமது வெளியீடுகளை அணுக்கப்படுத்துவதற்கான அனுமதியினை அளித்தனர்

Published on Author Noolaham Foundation

சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நண்பர்கள் பலரும் இணைந்து கொழும்பிலிருந்து “மீள்பார்வை மீடியா சென்ரர்” (Meelparvai Media center) எனும் பதியப்பட்ட நிறுவனத்தின் ஊடாக வெளியிடும் வெளியீடுகளான மீள்பார்வை பத்திரிகை, மற்றும் அவர்களுடைய சஞ்சிகை வெளியீடுகளான 1) பயணம், 2) வைகறை, 3) சர்வதேசப்பார்வை முதலிய சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 14/09/2015 அன்று கொழும்பு 9 ல் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து… Continue reading “மீள்பார்வை மீடியா சென்ரர்” தமது வெளியீடுகளை அணுக்கப்படுத்துவதற்கான அனுமதியினை அளித்தனர்

தென்றல் இதழ்களை அணுக்கப்படுத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டது

Published on Author Noolaham Foundation

“தென்றல்” இதழின் ஆசிரியர் திரு.க. கிருபாகரன் தென்றல் இதழ்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான உத்தியோகபூர்வ அனுமதியினை 29/06/2015அன்று மட்டக்களப்பில் தனது இல்லத்தில் வைத்து நிறுவனத்தின் தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம் கையளித்தார். http://tinyurl.com/ofpxzh6 மேலும் தொடர்ச்சியாக காலாண்டுக்கு ஒருமுறை வெளிவருகின்ற தென்றல் இதழ்களை, நூலக நிறுவனத்துக்கு அனுப்புவதற்கும் உடன்பாடு தெருவித்திருந்தார். நூலக வலைத்தளத்தில் தென்றல் இதழ்களை இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக உலகம் முழுவதுமுள்ள வாசகர்கள் அணுகிப் பயன்பெறமுடியும்.… Continue reading தென்றல் இதழ்களை அணுக்கப்படுத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டது

யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலையில் கலாநிதி படிப்பினை மேற்கொள்ளும் ‘மார்க் ப்ளம்போர்த்’ வருகை

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘மார்க் ப்ளம்போர்த்’ மற்றும் மக்கில் பல்கலைக்கழகம், மொன்ராரியல் கனடாவில் முதுகலைமானி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘ஹரினா அற்ரொன்’ முதலியோர் வருகைதந்து, நூலக செயற்பாடுகளினைக் கேட்டறிந்ததுடன், சில எண்ணிம ஆவணப்படுத்தல் சார் இணைச் செயற்பாடுகளை நூலகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் விருப்பம் தெரிவித்திருந்தனர். http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.09.01

ரொறான்ரோ தமிழ் தெரு விழாவில் நூலக நிறுவன அறிமுகப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

“தமிழ் பெஸ்ட்” என்ற ஓர் வீதித் திருவிழா கனடா ரொரன்றோவில் கடந்த மாதம் 29/08/2015, 30/08/2015 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. அதன் போது நூலக நிறுவனம் தொடர்பான பரப்புரையும் கனடா வாழ் நூலக தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனூடாக பலரும் நூலக நிறுவனத்தின் தன்னார்வப்பணிகளைப்பற்றியும் இதர செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டனர். இதன்போது நூலகத்தின் வெளியீடுகள் உட்பட்ட இதர ஆவணங்களும் ஓர் காட்சிக்கூடம் அமைத்துக் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நூலகத்தின் செயற்பாடுகள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. https://www.facebook.com/hashtag/tamilfestto?source=feed_text&story_id=1030599340304788