நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

Published on Author Noolaham Foundation
http://www.noolahamfoundation.org/blog/?p=1134

getinvolve_blog
நூலக நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவை (Annual Plan and Budget) முன்வைத்தும் அதற்குத் தேவையான வளங்களை வளந் திரட்டுதல் திட்டம் (Resource Mobilization Plan) ஊடாகவும் முன்னெடுக்கின்றது.  இந்தப் பொறிமுறை நூலக நிறுவனமயாக்கச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  நாம் இந்தப் பொறிமுறையை  நேர்த்தியுடன் கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்.

நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல் தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் நூலக நிறுவனத்தின் பங்கேற்பாளரான உங்களின் உள்ளீடுகளை நாம் வரவேற்கிறோம்.  உங்கள் உள்ளீடுகளை நவம்பர் மாதம் (2016) இறுதிக்குள் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கவும்.  இந்தச் செயலாக்கம் தொடர்பான சந்திப்புக்களில் பங்குகொள்ள ஆர்வம் இருப்பின் தயந்து மின்னஞ்சலில் குறிப்பிடவும்.  உங்கள் உள்ளீடுகளை பின்வரும் வடிவத்தில் சமர்ப்பித்தால் உதவியாக அமையும்.  நன்றி.

 • வியூக முன்னுரிமைகள் – Strategic Priorities – நூலக நிறுவனம் எந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 • பயனர் சேவைகள் – User Services – நூலக நிறுவனத்தின் பயனர்களான நீங்கள், எதை எதிர்பாக்கிறீர்கள்.
 • செயற்திட்ட முன்மொழிவுகள் – Project Proposals – நூலக நிறுவனம் குறிப்பான எந்தச் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.  விரிவான செயற்திட்டங்களைச் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் இந்த செயற்திட்ட வார்ப்புருவைப் பார்க்கவும்: https://github.com/noolahamfoundation/communications/wiki/Project-Plan-Template
 • நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் – Administration and Communication – நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் தொடர்பாக நூலக நிறுவனம் எத்தகைய வழிகளில் முன்னேற வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.  அதற்கான உங்கள் பரிந்துரைகள்.
 • வளந்திரட்டல் – Resource Mobilization – நூலகம் நிறுவனம் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள எந்த வழிமுறைகளில், எந்த மூலங்களை அணுகி வளந்திரட்ட முடியும், அது தொடர்பாக உங்கள் கருத்துக்கள்.

குறிப்பாக பின்வரும் செயற்திட்டங்கள் / முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதினால், அவை தொடர்பாகவும் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

 • முதன்மைப் பணிகள் – Core Work
  -> Documentation – ஆவணப்படுத்தல்
  -> Collections Development – சேகர அபிவிருத்தி
  -> Digital Preservation – எண்ணிமப் பாதுகாப்பு
  -> Providing Open Access – அணுக்கப்படுத்தல்
 • ஊர் ஆவணப்படுத்தல் – Village Documentation
 • பல்லூடக ஆவணகம் – Multimedia Archive
 • பெண்கள் ஆவணகம் – Women Archive
 • மெய்நிகர் கற்றல் சூழல்கள் – பள்ளிக்கூடம் செயற்திட்டம் – Virtual Learning Environment – Pallikoodam
 • முஸ்லீம் ஆவணகம் – Muslim Archive
 • இணைப்புத் தரவு செயற்திட்டம் – Linked Data Project
 • சுவடிகள் ஆவணகம் – Manuscripts Archive
 • வாழ்க்கை வரலாறுகள் – Biographical Dictionary
 • வாய்மொழி வரலாறு – Oral History Project
 • மலையக ஆவணகம் – Malaiyakam Archive
 • வலை ஆவணகம் – Web Archive & Aggregator
 • பள்ளிகள்/நிறுவனங்கள் களஞ்சியங்கள் – Institutional Repositories
 • இலங்கையில் சாதிய எதிர்ப்புப் போராட்ட ஆவணகம் – Anti Caste Struggle Archive
 • தமிழ் ந.ந.ஈ.தி ஆவணகம் – LGBTQ Archive
 • ஈழப்போராட்ட ஆவணகம் – Eelam  Struggle Archive
 • தனிநபர் ஆவணகங்கள் – Personal Archives
 • மாற்றுத்தினளாளிகளுக்கு அணுக்கப்படுத்தல் செயற்திட்டம் – Accessibility Project
 • ஈழத்துப் படைப்புக்கள் பட்டியலாக்கம் செயற்திட்டம் – Cataloging Project
 • தமிழ் எழுத்துணரியாக்கம் செயற்திட்டம் – Tamil OCR Implementation Project
 • தமிழ் பேச்சொலியாக்கம் செயற்திட்டம் –  Tamil Text to Speech Project
 • தமிழ் ஆவண மாநாடு – Tamil Documentation Conference
 • துறைசார் ஆய்விதழ் – LIS/Archival Science/Museology/Digital Preservation and Access Journal in Tamil
 • துறைசார் தகவல் தளம் – LIS/Archival Science/Museology/Digital Preservation and Access Information Portal
 • துறைசார் சஞ்சிகை – Magazine (Documentary Heritage, Publishing, Multimedia productions)
 • குறிப்பான ஆய்வுகள் – Specific Research Projects
 • குறிப்பான வெளியீடுகள் – Specific Publications
 • இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல் செயற்திட்டம் – Documenting crafts and technologies of the Sri Lankan Tamil speaking communities
 • தேடல்/தரவு சுரங்கச் செயற்திட்டம் – Data-mining/Vertical Search
 • உள்ளூர் அறிவு வரைபடங்களும் தரவுத்தளங்களும் – Local Knowledge Maps and Databases (Plants, Herbs, Crafts etc)
 • குறைந்த செலவிலான மின்வருடல் தீர்வுகள் – Low cost scanning solutions
 • இயல்பு எண்ணிம ஆவணச் சேகரிப்பும் பேணிக்காத்தலும் – Born Digital Collections Harvester and Archive
 • முப்பரிணாம ஆவணப்படுத்தல் – 3D Scanning/Archiving of archival/archaeological objects
 • தமிழ்த் தரவைக் காட்சிப்படுத்தல் செயற்திட்டம் – Tamil Data Visualization Project
 • பயனர் கூட்டாக்கச் சேகரிப்புக்கள் – User Shared/Contributed Collections
 • ஆய்வுத் தரவு மேலாண்மை ஒருங்கியம் – Research Data Management System
 • ஆய்வேடுகள் மற்றும் மேற்கோள்கள் ஆவணகம் – Thesis & Citations Archive

 

இந்தச் செயலாக்கத்தின் ஊடாக உருவாக்கப்படும் 2017 ஆன ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவு, 2017 வளந்த் திரட்டுதல் திட்டம் ஆகியன சனவரி 2017 இல் வெளியிடப்படும்.

தொடர்புகள்: noolahamfoundation@gmail.com2 Responses to நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

 1. சிறந்த உங்கள் தூரநோக்குடைய திட்டமிடலும் ஆர்வமும் ஆச்சரியமான மகிழ்ச்சியைத் தருகிறது. பல வருடங்களாக இவற்றின் சேவையை நான் பயன்படுத்தி வருவதன் காரணமாக அதன் பெறுமதியை நன்கறிவேன்.முதலில் இந்த சேவைக்கும் சேவையாளர்களுக்கும் நன்றி.

  கனணிக்கு தமிழ் வந்த போது அங்கு புத்தகங்களைத் தந்தீர்கள். நூலகத்தையே பொது சனத்துக்குத் திறந்து விட்டீர்கள். இப்போது தொழில்நுட்ப யுகத்தினுள் அடுத்த சந்ததி கால் வைக்கும் போது அதனோடு சேர்ந்து நீங்களும் ஓடியோ வீடியோ அலகுகளில் அறிவைச் சேகரிக்கும் பணியைத் திட்டமிடுகிறீர்கள். உங்கள் தூர நோக்கும் தெளிவான திட்டமிடலும் இந்த ஆர்வமும் தொடர்ந்து நூலகத்தோடு பயணிப்பதாக!

  திட்டமிடல் குறித்த கருத்துக்களைக் கேட்டிருந்தீர்கள்.

  1.வியூக முன்னுரிமை: நீங்கள் திட்டமிட்டிருப்பது போல வீடியோ ஓடியோக்களில் ஒலி ஒளி வடிவங்களில் வந்திருக்கிற விடயங்களை சேகரிப்பது மிகச் சிறந்த தூரப் பார்வை! குறிப்பாக இலங்கை இந்தியா உட்பட புலம்பெயர்ந்த நாடுகளில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் காற்றோடு கலந்து போய் விடும் தரமான பேச்சாளர்களின் பேச்சுகள், இலக்கிய கட்டுரைகள், குறிப்பிட்ட ஒரு உபயோகமான சமூகப்பிரச்சினை குறித்த மக்கள் கருத்தாடல்கள் மேடை நாடகங்கள்….போன்ற விடயங்கள் நிச்சயமாகச் சேகரிக்கப் பட வேண்டியவை. சிறந்த சில விடயங்களை பின்னர் வேறெப்போதும் பெற முடியாமலே போய் விடுகின்றது. குறிப்பிட்ட வானொலிகளும் அவற்றைச் சேகரித்து வைப்பது குறைவு.நேரம், ஆர்வக்குறைவு,… போன்று இதற்குப் பல காரணங்கள்.

  நம்மிடம் தொலைந்து போன இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்து பல தமிழ் நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அது போல பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பான றேடியோ வெரிற்றாஸின் தமிழ் பணி நிகழ்ச்சிகள்…..இப்போது அவைகள் வரலாறாகவே புதிய சந்ததிக்கு தெரியாதனவாகவே போய் விட்டன.

  அது போல ஒரு நிகழ்வுக்கு வருகின்ற பேச்சாளர்களின் பேச்சுக்களும் கூட குறிப்பிட்ட விழா நடத்துனர்களிடம் கேட்டு வாங்கிச் சேகரிக்கத் தகுந்தவை.

  அந் அந் நாடுகளில் வாழ்கிறவர்கள் இவற்றை ஒரு சேவையாகச் சேகரிக்கத் தொடங்கலாம். அதனை எவ்வாறு பத்திரப்படுத்துவது, என்ன வழியாக அவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பது, எப்படியான வகைப்பாட்டினுள் அவற்றை அடக்குவது என்பது தொடர்பாக அத்துறையோடு நிபுணத்துவம் கொண்டவர்கள் யோசிக்கலாம்.

  2. குறிப்பாக ஒலிக்கீற்றுகள். குறிப்பிட்ட ஒரு பேச்சாளரின் பேச்சு, சில வேளைகளில் குறிப்பிட்ட ஒரு இசைத் துண்டு அல்லது ஒருவர் பேசிய கருத்துத் துண்டு….சில பிரபலங்கள் பேசியவை அவர்களின் குரலிலேயே பதியப்பட்டிருக்குமானால் அது எத்தனை பெரிய வரலாற்று மூலாதாரம்! குறிக்கப்பட்டிருக்கிற மனிதனின் ஆயுள் காலத்தை நம்மால் பேணி வைக்க முடியாது. ஆனால் பேசியதை; அவர் குரலை; அவரின் காட்சியை என்றென்றைக்குமாகச் சேகரித்து வைக்கவும் பயன் படுத்தவும் இன்று தொழில் நுட்பம் வகை செய்திருக்கிறது. அதனைச் செயலாக்க ஆர்வமுள்ள நிபுணத்துவம் கொண்ட தொண்டர்களும் இருக்கையில் இது எதிர்காலத் தமிழுக்கு எத்தனை பெரிய வரப் பிரசாதம்!

  3. ஏற்கனவே அவர்கள் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார்கள். இரட்டிப்பு ஆர்வத்தோடும் திட்டமிடலோடும் அவர்கள் வழி நடக்கிறார்கள்.

  4. ஆர்வமுள்ளவர்களை அந் அந் நாடுகளின் வழியாகக் கண்டறிந்து அவ் அவற்றுக்கான பொறுப்புகளைக் கையளித்தல். பெரிய நாடெனில் அதனை மாநில வாரியாக பிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்தையும் ஒவ்வொருவருக்குக் கொடுத்து விடய சேகரிப்புக்கான பொறுப்பினைக் கையளித்தல். முதலில் 2017க்கு முன்னர் வந்த இயலக்கூடிய வளங்களைச் சேகரித்தல். அதில் என்னென்ன வகைப்பாடுகள், பிரிவுகள் என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளலும் அதனை எவ்வாறு நூலத்துக்குள் வைப்பிடுவது பற்றிய தொழில் நுட்பத்தை அறிவிப்பதும்; அதே நேரம் வானொலி தொலைக்காட்சி அல்லாத ஏனைய மேடை நிகழ்வுகளை எவ்வாறு பிரிப்பது பெறுவது என்பது தொடர்பான தெளிவும் அவசியம். பின்னர் வருடம் ஒன்று – குறிப்பாக 2017இல் என்றால் அந்த வருடத்துள் குறிப்பிட்ட நாட்டில் அல்லது நாட்டில் உள்ள மாநிலத்தில் நடந்த குறிப்பிட்ட தமிழ் சமய சமூகவியல் சார்ந்த விடயங்களை முதலில் ஏற்கனவே வகைப்படுத்தி இருக்கிற வகைப்பாட்டின் வழி சேகரிக்க தொடங்கலாம்…..

  நேரங்கள் எல்லோருக்கும் மிகச் சொற்பமாகவே இருப்பதால் வேளை கிடைக்கும் பொழுதுகளில் வேறேதேனும் அபிப்பிராயங்கள் தோன்றும் போது சொல்ல ஒரு உரையாடற் களம் இருந்தால் நல்லது. நாடுகள் வேறு வேறு; நேர காலங்கள் வேறு வேறு. அவரவர் நேரங்கள் வாய்க்கிற போது வந்து பேசிக் கருத்துப் பரிமாற அது நல்ல வாய்ப்பாக இருக்கும். அவ் உரையாடல்கள் குறிப்பாக எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியதாக இருப்பதும் அது வெளிப்படையாக இருப்பதும் வசதியாக இருக்கும். ஒருவருக்குத் தோன்றாத ஒரு விடயம் இன்னொருவருக்குத் தோன்றக் கூடும். அது நல்ல பாதையை பின்னால் திறக்கத் தக்க தகுதி கொண்டதாகவும் விளங்கக் கூடும்.

  அபிப்பிராயம் ஏதும் தோன்றி நேரமும் வாய்க்குமானால் தொடரும்….

  தமிழால் இணைந்திருப்போம்.

 2. குறிப்பாக மேலும் ஒரு விடயம் பின்னர் நினைவுக்கு வந்தது. பல்கலைக் கழகங்களில் சிறப்பு பட்டப்படிப்பு செய்கிற மாணவர்கள் தம் இறுதி வருடத் தேர்வுக்காக ஓர் ஆய்வு புத்தகம் ஒன்றினைச் சமர்ப்பிக்க வேண்டும். அவை நல்ல தரவுகளையும் குறிப்புகளையும் ஆய்வுகளையும் மையமாகக் கொண்டு விளங்குபவை. பொது சன பார்வைக்கு வராதவை. பொதுவாக அவை பல்கலைக் கழக நூலகங்களிலேயே தான் சேமிக்கப் பட்டிருக்கும். அவைகளை டிஜிட்டலில் சேமிப்பது பற்றியும் யோசித்துப் பார்க்கலாம். பல்கலைக்கழகங்கள் அவற்றுக்கான அனுமதியைத் தருமா எனத் தெரியவில்லை.

  மேலும், தனி நபர்களிடம் இருக்கும் சொந்த சேகரிப்புகள் பல சிறப்பான கருவூலங்களைக் கொண்டிருக்கும். அவர்களிடம் இருந்து அவற்றைப் பெறுவது எவ்வாறு / அது சாத்தியப்படுமா என்பது பற்றியும் யோசிக்கலாம்.