த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது

Published on Author Noolaham Foundation

தமிழ்ச் சூழலில் கட்டற்ற இயக்கத்தை (Free Software and Free Culture Movement) கொள்கையிலும் செயலிலும் முன்நகர்த்திச் செல்வதில் முதன்மையான ஒரு பங்களிப்பாளரான த. சீனிவாசனுக்கு 2016 இக்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின்தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது” கிடைத்துள்ளது.  இது அவரது பரந்த பங்களிப்புக்கான ஒரு சிறு அங்கீகரிப்பே.  அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.  தமிழ்க் கணிமைக்கு அவரது விரிவான பங்களிப்பை பற்றி இங்கும், இங்கும் மேலும் அறியலாம்.

களத்தில் உள்ள தமிழ்க் கணிமை தேவைகளை அறிந்து, அதை நிரலாக்கம்/கருவியாக்கம் மூலம் நடைமுறையில் இன்று பயன்படுத்தக்கூடியவாறு நிறைவேற்றுவதில் சீனிவாசனின் பங்களிப்பு முதன்மையானது. கூகிள் எழுத்துணரிக்கு (OCR) அவர் செய்த கருவியாக்கம் (Tooling) மூலம் விக்கி மூலத்திலும் நூலகத்திலும் 500,000 மேற்பட்ட பக்கங்கள் பதிவேற்றப்பட்டன.  இந்த எண்ணிக்கை அன்றாடம் கூடி வருகிறது.

நூலகத்திலும் அவரது பங்களிப்பு முக்கியமானது.  நாம் பல்லூடக ஆவணகத் தளத்தை உருவாக்க பல சாவல்களைச் சந்தித்தப் போது, உதவி கேட்டோம்.  தயங்காமல் archivematica + atom நிறுவித் தந்தார்.  அந்த நுட்பத்தை நாம் பின்னர் தேர்தெடுக்கவில்லை எனினும் அது பல சாத்தியக்கூறுகளை, அனுபவங்களை எமக்கு வழங்கியது.  மேலும் தொடர்ச்சியாக தேவைப்படும் நிரலாக்கம், பராமரிப்புப் பணிகளில் உதவி வருகிறார்.

த. சீனிவாசனில் போன்றோரின் முன் எடுத்துக்காட்டுக்களைப் பின்பற்றி பல கட்டற்ற நிரலர்கள் தமிழ்க் கணிமைத் துறைக்கு பல கள முனைகளில் பங்களிகக் முன்வர இந்த விருது ஊக்கமாக அமையும் ஆக.

https://github.com/tshrinivasan