அனைவருக்காகவும் நூலகங்கள்! – ஒரு படக்காட்சி

Published on Author தண்பொழிலன்

பால், இனம், மதம், வயது, உடல் இயலுமை, வர்க்கம் ஆகிய அனைத்து பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை நூலகங்கள். அனைவருடனும் பகிர்வையும், இணக்கத்தையும் பேணுவதையே அவை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். இதை வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ரெபேக்கா மெக்கோர்கிண்டேல் (Rebecca McCorkindale) வெளியிட்ட சிறுமவியல் (minimalist) படங்கள், உலகில் பலரின் கவனத்தையும் கவர்ந்தன.

ரெபேக்கா அமெரிக்காவின் Gretna, Nebraska என்ற ஒரு சிறிய ஊரில் நூலகராகப் பணியாற்றுபவர். “அனைவருக்காகவும் நூலகங்கள்” (Libraries Are For Everyone) என்ற தொனிப்பொருளில் இவர் வரைந்த படங்கள் இதுவரை 50இற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கின்றன. அண்மையில் இந்த மொழிகளில் தமிழும் இணைந்துகொண்டது. நூலகர் லதா மாணிக்கவாசகம் அவர்களால் இப்படங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. கட்டற்ற உரிமத்தில் பகிரப்பட்டுள்ள இந்தப் படங்களை நீங்களும் பயன்படுத்த முடியும். பகிரமுடியும்.