கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday May 27

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஜூன் முதல் வாரம் 2,3,4ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் இரண்டாவது நாள் ஆய்வரங்கில் முதல் நிகழ்வாக சிற்றிதழ்கள் பற்றிய ஆய்வரங்கு இடம் பெற உள்ளது. இந்தச் சிற்றிதழ்கள் அரங்கிற்கு இணைத்தலைவர்களாக பேராசிரியர் சபா ஜெயராசா, செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பார்கள். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆய்வரங்களைத் தொடங்கி வைப்பார்.

மேற்படி ஆய்வரங்கில் ஐந்து காத்திரமான ஆய்வுரைகள் இடம் பெற உள்ளன. தமிழ்த்தென்றல் தம்பி சிவா (கற்பகம் ஆசிரியர்) ‘ஈழத்து தமிழ்ச் சிற்றிதழ்கள் இலக்கிய வளர்ச்சியில் ஏற்படுத்தி தாக்கம் ஒரு அவதானிப்புஎன்ற பொருளிலும் நீங்களும் எழுதலாம்சிற்றிதழ் ஆசிர்யர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் கிழக்கிலங்கைச்சிற்றிழ்களின் வகிபாகமும் அதன் இலக்கிய பங்களிப்பும்ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பிலும் கவிஞர்.சு.முரளிதரன் பன்முகப் பார்வையில் மலையகச் சிற்றிதழ்கள் இயக்கமும் அது ஏற்படுத்திய தாக்கமும்என்னும் விடயத்திலும் எழுத்தாளரும் விமர்சகருமாகிய லெனின் மதிவானம் இணைய இதழ்களின் பார்வையும் பதிவும்என்னும் கருத்திலும் நூலக பிரதம செயற்பாட்டதிகாரி சிவானந்தமூர்த்தி சேரன் சிற்றிதழ்களின்ஆவணப்படுத்தலின்அவசியமும் நூலக நிறுவனமும்என்ற தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகளைச்சமர்ப்பிப்பார்கள்.

சிற்றிதழ்கள் ஆய்வரங்கில் சிறப்பு அம்சமாக இலங்கையில் இது வரை வெளிவந்துள்ள சிற்றிதழ்களின் அட்டைப் படங்கள் திரையில் காட்சிப்படுத்தப்படும் மேலும், இலங்கையில் இது வரை வெளிவந்துள்ள சிற்றிதழ்களின் பெயர் விபரங்களும் நூலக அனுசரணையும் ‘ – சிறு தொகுப்பு நூலாக வழங்கப்படும். ஆய்வரங்கில் மதிப்பீட்டாளர்களாக மோசஸ், திருமதி ப.சந்திரபவானி ஆகியோர் செயல்படுவார்கள். இணைப்பாளராக கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா செயற்படுவார்.