“பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

Published on Author Noolaham Foundation

நூலகத்தின் ஏற்பாட்டில் “பனையோலை – ஆவணப்படுத்தல் செயலமர்வு” 09.09.2012அன்று யாழ்ப்பாணம், ‘தொடர்பகம்’ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு நூலகம் நிறுவனத்தின் யாழ் இணைப்பாளர் திரு கே. கௌதமன் தலைமை வகித்தார். “இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தலின் அவசியம்” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு. குருபரன், “இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தல் சார்ந்து இன்றைய எமது நிலை” என்ற தலைப்பில் முனைவர் ஜெ. அரங்கராஜ், “சர்வதேச நியமங்களினுடனான உலக நாடுகளின் ஆவணப்படுத்தல்” என்ற தலைப்பில் சி. சேரன், “புதிய தொழில்நுட்பங்களினுடனான பல்வேறு பரிணாமங்களினுடனான ஆவணப்படுத்தல்” பற்றி திரு க. சுரேஸ்குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

தொடர்ந்து ‘கரந்தைப்பூ’ என்ற குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

1981 ற்கு முற்பட்ட நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்ட ஆவணங்கள் அடங்கிய இறுவெட்டு கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ஆவணப்படுத்தல் சார்ந்து நூலக நிறுவனத்துடன் இணைந்துஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்கள் இயங்ககூடிய இயங்கு தளங்கள் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக நூலகத்தினர், யாழ் பொதுசன நூலகத்தினர் மற்றும் ஆவணப்படுத்தல் தொடர்பூடகங்கள் இலக்கியத்துறை சார்ந்து செயற்படும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சட்டத்துறை விரிவுரையாளர் கு. குருபரன்

முனைவர் ஜெ. அரங்கராஜ்

நூலகம் நிறுவனத்தின்  நிர்வாக அதிகாரி  சி. சேரன்

திரு க. சுரேஸ்குமார்

யாழ்ப்பாணம் பொதுநூலக நூலகரிடம், 1981 க்கு முற்பட்ட நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தபட்ட
ஆவணங்கள் அடங்கிய இறுவெட்டுப் பிரதியை கையளிக்கும் ‘புதிய நூலகம்’ ஆசிரியர் மற்றும் நூலக நிறுவன தொடர்பாடல் அணியைச் சேர்ந்த திரு சு. குணேஸ்வரன்
கரந்தைப்பூ – குறும்படம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட நூலகர் திருமதி கல்பனா அவர்கள் கலந்துரையாடலில்.
இணைய உதயன் இயக்குநர்   எஸ். அனுராஜ் கலந்துரையாடலில்
ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் உபகரணத்துடன்  விளக்கமளிக்கும் சி. சேரன்.