தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

லண்டனில் 26/04/2015 அன்று இடம்பெற்ற, “தவில் மேதை தட்சணாமூர்த்தி” அவர்களைப்பற்றிய ஆவண இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நூலக நிறுவனம் பற்றியதும், நூலக நிறுவனத்தின் சாதனைகள் பற்றியதுமான சிறப்பான உரை ஒன்று இளையதம்பி தயானந்தா அவர்களினால் ஆற்றப்பட்டது. அவர் தனது உரையில் நூலகம் நிறுவனம், இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் சார் 15,000க்கும் மேற்பட்ட எழுத்தாவணங்களை கடந்த 11 வருடங்களில் ஆவணப்படுத்தி உலகம் பூராகவும் இலவசமாக பகிர்ந்திருப்பதனை நினைவு கூர்ந்தார்.

Thavil

மேலும் அவரது அவ்வுரையில் நூலக நிறுவனத்தின் அனைத்து எண்ணிம ஆவணப்படுத்தல் முயற்சிகளுக்கு, பலரும் தம்மால் இயன்ற நிதி மற்றும் இதர உதவிகளை நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி இலங்கைத் தமிழச் சமூகம் சார் ஆவணப்படுத்தல் தன்னார்வுச் செயற்பாட்டுடன் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
Thivi

அத்துடன் இவ் “தவில் மேதை தட்சணாமூர்த்தி” அவர்கள் தொடர்பான ஆவணமாக்கல் செயற்பாட்டின் ஆரம்ப முயற்சிகள், உந்துதல்கள் யாவும் “இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் அறிச்செல்வங்களினை ஆவணப்படுத்திவரும் நூலக நிறுவனத்தின் இயக்குணர் திரு. பத்மநாப ஐயர் இரத்தின ஐயர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Thav

Thavil m