“சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகள் யாவற்றையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதி ‘சூரியா’ நிலையத்தினால் 30-06-2015 அன்று லேடி மன்னிங் றைவ், மட்டக்களப்பில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகரிடம் கையளிக்கப்பட்டது. கிழக்கிலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் தொடர்பான முன்னேற்றம், அபிவிருத்தியில் பல பெண்கள் மற்றும் புத்தியீவிகளின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் ‘சூரியா’ நிலையம் பல்வேறு பெண்ணியம் சார்ந்த வெளியீடுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

மேலும் பெண்ணியம் சார்ந்து செயலாற்றும் பலரது எழுத்துக்களை நூல்களாகவும், தமது சஞ்சிகைகளிலும் பிரசுரித்து வந்துள்ளது. அந்தவகையில் சூரியாவின் “பெண்” சஞ்சிகை இலங்கையில் பலராலும் பேசப்படும் பெண்ணியம் தொடர்பாக வெளிவரும் சஞ்சிகை ஆகும். இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்க்க முடியும். இது போல மேலும் சில சூரியா நிலையத்தின் வெளியீடுகளையும் ஆவணப்படுத்தி நூலக நிறுவன எண்ணிம நூலகத்தினூடாக பகிர்ந்துள்ளது.

Surii 2

நூலக நிறுவனம் கடந்த காலங்களில் இலங்கைத் தமிழ் பேசும் சமூகத்தின் பெண்ணியம் தொடர்பான பல்வேறு நூல்கள், சஞ்சிகைகள், பிரசுரங்களை ஆவணப்படுத்தி அதற்கென சிறப்பான வலைவாசல் ஒன்றினையும் ஏற்படுத்தி உலகம் பூராகவும் அவற்றை இலவசமாக பகிர்ந்துள்ளது. அவற்றில் ‘பெண்கள் கல்வி ஆய்வு நிலையம்’, ‘பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு’, ‘பெண்கள் கல்வி நிறுவனம்’ போன்ற பல பெண்ணியம் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் வெளியீட்டு ஆவணங்களினையும் எண்ணிம ஆவணப்படுத்தி பகிர்ந்துள்ளது. இந்த வரிசையில் விரைவில் சூரியா பெண்கள் நிலையத்தின் தொடர்ச்சியான அனைத்து வெளியீடுகளையும் ஆவணப்படுத்தி அனைவருக்கும் இலவசமாக பகிரவுள்ளது.
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D

http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.06.30
இது போன்ற நூலகத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாட்டுக்கு அனைவரும் ஆவணங்களினைத் பகிர்ந்தோ அல்லது நிதி பங்களிப்பினூடாகவோ உதவ முன்வருவதனை நூலக நிறுவனம் மேலும் எதிர்பார்க்கின்றது.