பேரா. கா. குகபாலன் தனது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

Published on Author Noolaham Foundation

புவியியல்த் துறை ஓய்வுநிலைப் பேரா.குகபாலன் கார்த்திகேசு 22/07/2015 அன்று நூலக நிறுவன யாழ் அலுவலகத்துக்கு வருகை தந்து, இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் மேற்கொள்வதன் அவசியம் குறித்து நூலக அலுவலகர்களுடன் ஓர் சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு இருந்தார்.

பேரா.குகபாலன் புவியியல், வரலாறு, அரசியல் நிலைப்பட்ட பல முக்கிய புத்தகங்களினை எழுதியுள்ளார். அவற்றில் இதுவரை நூலக நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றன, நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பத்வேற்றப்பட்டு அனைவருக்கும் இலவசமாகவும் இன்று பகிரப்பட்டுள்ளன. இவ்வாறு பகிர்வதற்கான அனுமதியையும் பேரா.குகபாலன் அன்றைய தினமே நூலக நிறுவனத்திடம் கையளித்தார்.

http://tinyurl.com/p7f9n6k-கா.குகபாலன்

http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.07.22

Kuka

Kukapa

மேலும் பேரா.குகபாலன் எழுதிய “யாழ்ப்பாண இடப்பெயர்வு” எனும் நூல் யாழ்மக்களின் 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இடப்பெயர்வினை அரசியல், சமூக, வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தி உள்ளதுடன் எதிர்கால தலைமுறைக்கும் அதனை சிறப்பாக எடுத்துச் செல்கின்றது. இந்நூலினையும் நூலக வலைத்தளத்தில் பார்வையிடமுடியும்.

இச் சந்திப்பில் நூலகத்தின் தன்னார்வச் செயற்பாடுகளுக்கு நிதி உதவி அளிக்கக்கூடிய ஆர்வலர்கள் ஒருசிலரை பேராசிரியர் குகபாலன் அவர்கள் இனம்காட்டியும் இருந்தார். அத்துடன் நூலகத்தின் சார்பாக பேராசிரியருக்கு நூலக நிறுவனம் 2014ல் வெளியிட்ட தமிழ் ஆவணமாநாட்டு மலர் ஒன்றினையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.