“மீள்பார்வை மீடியா சென்ரர்” தமது வெளியீடுகளை அணுக்கப்படுத்துவதற்கான அனுமதியினை அளித்தனர்

Published on Author Noolaham Foundation

சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நண்பர்கள் பலரும் இணைந்து கொழும்பிலிருந்து “மீள்பார்வை மீடியா சென்ரர்” (Meelparvai Media center) எனும் பதியப்பட்ட நிறுவனத்தின் ஊடாக வெளியிடும் வெளியீடுகளான மீள்பார்வை பத்திரிகை, மற்றும் அவர்களுடைய சஞ்சிகை வெளியீடுகளான
1) பயணம்,
2) வைகறை,
3) சர்வதேசப்பார்வை முதலிய சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 14/09/2015 அன்று கொழும்பு 9 ல் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவன தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம் கையளித்தனர்.

Meelp

Meel

இந்நிகழ்வில் நூலக நிறுவன நிர்வாக அலுவலர், மீள்பார்வை ஆசிரியர்கள் மற்றும் மீள்பார்வை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கூடிய விரைவில் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் இவ் அனைத்து வெளியீடுளும் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி அனைவருக்கும் பகிரப்படும்.

http://tinyurl.com/Meelparvai

(நூலகத்தில் உங்களது ஆவணங்களும் உங்களுடைய உத்தியோகபூர்வ அனுமதியுடன் எண்ணிமப்படுத்தி அனைவருக்கும் பகிர தொடர்புகொள்ளவும்-011 23 63 261, 021 223 1292)