Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது

Published on Author Noolaham Foundation

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து மாதம் ஒருமுறை பிரசுரிக்கப்பட்டு நாட்டின் பல பாகங்களிலும் விற்பனைக்குள்ளாகும் Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் தொடர்ச்சியாக எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 22/09/2013 அன்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள Tamil CNN இன் காரியாலயத்தில் வைத்து அதன் ஆசிரியர் நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் கையளித்தார்.

மேலும் இதுவரை வெளியான “தாய்வீடு” சஞ்சிகை வெளியீடுகளையும் இந்நிகழ்வில் நூலக நிறுவனத்திடம் Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகை ஊழியர்கள் இணைந்து கையளித்தனர்.
விரைவில் Tamil CNN இன் “தாய்வீடு” சஞ்சிகைகளை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் திறந்த அணுக்கத்தில் பார்வையிட முடியும்.

Tmail

Tami

{{இப்பொழுது 15,000ற்கும் அதிகமான ஆவணங்களுடன்; உங்களது அனைத்து வெளியீடுகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி உலகலாவிய ரீதியில் பகிர்வதற்கு தொடர்பு கொள்ளவும்-
கொழும்பு- +94 112 363 261 யாழ்ப்பாணம்- +94 212 231 292}}