நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

Selvaraj

நூல் தேட்டம் செல்வராஜா என அனைவராலும் அறியப்படும் திரு. நடராஜா செல்வராஜா நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்குப் பலகாலமாகப் பங்களித்து வருபவர். அவ்வாறான நேரடிச் செயற்பாட்டாளர்கள் என்றாலும் ஒரு நிறுவனமாக முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு எழுத்துமூல அனுமதிகளை நூலக நிறுவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் செல்வராஜா அண்மையில் நூல் தேட்டப் பணிகளுக்காக இலங்கை வந்திருந்தபோது தனது அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார்.

ஈழத்து நூலகவியலாளரில் மிக முக்கிய இடம் வகிக்கும் செல்வராஜா ஓர் எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளரும் ஆவார். நூல் தேட்டம் நூல்வரிசை ஊடாக இதுவரை பத்தாயிரம் நூல்களைப் பதிவுசெய்துள்ள இவர் யாழ்ப்பாண நூலகம் தொடர்பான நூல்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்

இவரது 10 நூல் தேட்டம் தொகுதிகளையும் ஏனைய 10 நூல்களையும் இப்பொழுது நூலக வலைத்தளத்தில் வாசிக்க முடியும். அத்துடன் அவரது ஏனைய நூல்களும் விரைவில் ஆவணப்படுத்தப்படவுள்ளன.

இணைப்பில் மேலதிக நூல்கள்: http://tinyurl.com/om3jo2r
நடராஜா செல்வராஜா ஆளுமை: http://tinyurl.com/nwdfh8d

{{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

selv

selva

Selvar

Selvara