திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016

Published on Author Noolaham Foundation
http://www.noolahamfoundation.org/blog/?p=984

இந்த வாரம் (ஒக்ரோபர் 24 – 30, 2016) திறந்த அணுக்க வாரம் (Open Access Week) ஆகும்.  திறந்த அணுக்கம் என்பது அறிவு வளங்களை அனைவருக்கும் கட்டற்று கிடைக்கச் செய்தலுக்கான கொள்கையும் வழிமுறைopenaccessweek_logoயும் ஆகும்.  திறந்த அணுக்கத்தில் அறிவு வளங்கள் கிடைப்பது கல்வி, ஆய்வு, சமூக வளர்ச்சிக்கு அவசியம் ஆகும்.

மொழி, கணிதம், அறிவியல், கலைகள் என்று அறிவு என்றும் கட்டற்று இருப்பதன் ஊடாகவே மனித சமூகம் வளர்சி பெறுகின்றது.  ஆனால் இந்த அறிவு வளங்களின் பெரும் பகுதி உயர் கட்டணம் வாசூலிக்கும் இருட்டிய தரவுத்தளங்களில் பூட்டப்பட்டு இருக்கின்றன.  அணுக்கம் இல்லாத நூலகங்களில், ஆவணகங்களில், அருங்காட்சியகங்களில் தேங்கிக் கிடைக்கின்றன.

இவற்றை கட்டற்று கிடைக்கச் செய்வதை நோக்கக் கொண்டு கட்டற்ற/திறந்த அணுக்க இயக்கம் பிறந்தது.  இன்று அரசுகளும், அரச ஆதரவு பல்கலைக்கழகங்களும், ஆய்வகங்களும், நிறுவனங்களும் திறந்த அணுக்க பிரகடனங்களை பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு முழுமையான திறந்த அணுக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன.  அந்த நோக்கில் இந்தவாரம் (October 24 – 30, 2016) திறந்த அணுக்க வாரமாகக் கொண்டாடப்படுகின்றது.

திறந்த அணுக்கம் நூலக நிறுவனத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றாகும்.  எண்ணிமப் பாதுகாக்கப்படும் அனைத்து படைப்புகளும், படைப்பாளிகளுக்கு தகுந்த action_banner_-_bigger_textமதிப்பளித்து, அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் கிடைக்க வேண்டும் என்பதே எமது செயல்நோக்கு.  அந்த வகையில் இந்தத் திறந்த அணுக்க வாரத்தை உங்களோடு நாம் பகிர்கிறோம்.  அதன் கருப்பொருளான “செயலில் திறந்த அணுக்கம்” ( Open In Action ) என்பதோடு உங்களையும் இணையக் கோருகிறோம்.

நீங்கள் என்ன செய்யலாம்:

* நூலகத்தில் இருக்கும் ஆக்கங்களை திறந்த அணுக்கத்தில் பகிர நீங்கள் இன்னும் அனுமதி வழங்கவில்லை எனில், தயந்து வழங்குகள்.
* நூலகத்தில் உங்கள் ஆக்கங்களை திறந்த அணுக்கத்தில் சேர்க்கப்படவில்லை எனில், தயந்து சேருங்கள்.
* சக படைப்பாளிகளை, ஆக்கர்களை தமது ஆக்கங்களை திறந்த அணுக்கத்தில் மனிதச் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளக்கோருங்கள்.
* திறந்த அணுக்க விழுமியங்களை முன்னெடுத்துச் செல்லும் கொள்கை அறிமுகப் பணிகளில் ஈடுபடுங்கள்

தொடர்புகளுக்கு: noolahamfoundation@gmail.com