திறந்த அணுக்க வாரம்: பேவோல் எனும் புலமை வாணிபம்

Published on Author தண்பொழிலன்

‘திறந்த அணுக்க வாரம்’ (Open Access Week) எனும் பூகோள நிகழ்வு, வெற்றிகரமாக பத்தாவது தடவையாக இவ்வாண்டு ஒக்டோபர் 22 முதல் 28 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நீங்கள் இணையப் புலமையாளர் உலகத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்றால், “திறந்த அணுக்கம்” (open access) என்ற சொல்லாடலை அடிக்கடி கடந்திருப்பீர்கள். உயர் கல்வி நிறுவகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிகழ்கின்ற புலமைசார் ஆய்வுகளை உடனடியாகவும், இலவசமாகவும் சகலரும் பயன்படுத்துமாறு இணைய உலகில் வெளியிடுவதே ‘தகவலுக்கான திறந்த அணுக்கம்’ என்பதன் பொருள். நமது… Continue reading திறந்த அணுக்க வாரம்: பேவோல் எனும் புலமை வாணிபம்

நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பில் இருந்து ஓர் ஆய்விதழாக வெளிவரும் ‘மொழிதல்’ இதழ்களினை இப்போது நூலகம் நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இவ் ஆய்விதழ் அரையாண்டிதழாக 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான சி.சந்திரசேகரம், வ.இன்பமோகன், சு.சிவரத்தினம் முதலியோர் இவ் இதழ்களினது ஆசிரியர்களாக உள்ளனர். மேலும் பல முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் இவ் இதழின் ஆலோசகர்வட்டத்தில் பங்கெடுக்கின்றனர். பல்வேறு புலமையாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ் ஆய்விதழ் வெளியாகின்றது. இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்… Continue reading நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தமக்குள் கொண்டிருக்கும் மரபறிவுச்செல்வங்கள் ஏராளமானவை. ஒவ்வொரு காலப்பரப்பிலும் அவை கண்டுகொள்ளப்படாமல் அழிந்தொழிந்து போகின்றன. நமக்கு முந்தைய தலை முறையினரிடம் இருந்து, நாம் பெற்றுக்கொண்டவற்றை விட இழந்தவைகள் ஏராளம். ஒவ்வொரு தலைமுறை எழுச்சியின் போதும் இந்த விபத்து நடந்துகொண்டே இருக்கின்றது. நமது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு மிகக்கவனமாக ஆவணப்படுத்தப் பட வேண்டும் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதுவரை செயலில் இறங்கி அதைச் செய்தவர்கள் மிகச்சிலரே. நேற்று… Continue reading சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்