யாழில் SETME2018 ஆய்வரங்கு

Published on Author தண்பொழிலன்

“தொழிநுட்ப உலகில், எதிர்வரும் காலம், நான்காவது கைத்தொழில் புரட்சிக்காலமாக இனங்காணப்படுகின்றது. இக்காலத்தில், இலத்திரனியலின் செல்வாக்கு மேலும் வீரியமாக எமது வாழ்க்கையைப் புரட்டிப்போடுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்வுகூறப்படுகிறது. உதாரணமாக புதிய, முன்னெப்போதும் பெரிதும் அறிந்திராத the Internet of Things, autonomous vehicles, 3-D printing, nanotechnology, biotechnology, materials science, energy storage, and quantum computing போன்ற தொழில்நுட்பங்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன. இவை எப்போதுமில்லாத புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அவற்றுக்குத் தேவையான, எதிர்ப்பார்க்கப்படும் திறன்களும்… Continue reading யாழில் SETME2018 ஆய்வரங்கு

மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

Published on Author தண்பொழிலன்

ஒவ்வொரு கணப்பொழுதிலும் இணையத்தில் பெரும் எண்ணிக்கையிலான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்பனவற்றில் அறிவியல், பண்பாட்டு, அரசியல் உட்பட்ட பல துறைகளைச் சார்ந்த முக்கிய தகவல்கள் இருக்கின்றன. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, 1992 இல் ஆரம்பமான soc.culture.tamil usernet குழுமம் தொடங்கி, ஜியோசிட்டிஸ் (geocities), மன்றங்கள், வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் (blogs), அண்மைய டுவிட்டர் கீச்சுக்கள் (tweets) வரை விரிவான உள்ளடக்கம் உண்டு. ஏதேனும் ஒரு ஆய்வுப்பரப்பில், ஒரு தலைப்பை ஆய்வு… Continue reading மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

Library – Archive – Museum: தோற்றமும் பின்னணியும் பற்றிய வளங்கள்

Published on Author Natkeeran L. Kanthan

கல்வித் துறைகள், ஆய்வு முறைமைகள், சமூக நிறுவனங்கள் என்பன ஆக்கபூர்வமான விமர்சன நோக்கில் அணுகப்பட வேண்டியது அவசியம்.  நூலகங்கள் (Libraries), ஆவணகங்கள் (Archives), அருங்காட்சியகங்கள்  (Museums) ஆகிய மூன்றும் இவ்வாறே கூர்மையாக நோக்கப்படவேண்டும்.  பெரும்பாலும் இத்தகைய நினைவக நிறுவனங்கள் சமூகத்தின் அதிகார மையங்களோடு தொடர்புடையவையாகவே அமைகின்றன. இவற்றில்  எது ஆவணப்படுத்தப்படுகிறது, யார் ஆவணப்படுத்துகிறார்கள், எப்படி ஆவணப்படுத்துகிறது, யாருக்கு அணுக்கம் உள்ளது உட்பட்ட கேள்விகள் முக்கியமானவையாக அமைகின்றன. இன்றைய நவீன நூலகம் – ஆவணகம் – அருங்காட்சியக துறை நிறுவனங்களின்… Continue reading Library – Archive – Museum: தோற்றமும் பின்னணியும் பற்றிய வளங்கள்

சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தமக்குள் கொண்டிருக்கும் மரபறிவுச்செல்வங்கள் ஏராளமானவை. ஒவ்வொரு காலப்பரப்பிலும் அவை கண்டுகொள்ளப்படாமல் அழிந்தொழிந்து போகின்றன. நமக்கு முந்தைய தலை முறையினரிடம் இருந்து, நாம் பெற்றுக்கொண்டவற்றை விட இழந்தவைகள் ஏராளம். ஒவ்வொரு தலைமுறை எழுச்சியின் போதும் இந்த விபத்து நடந்துகொண்டே இருக்கின்றது. நமது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு மிகக்கவனமாக ஆவணப்படுத்தப் பட வேண்டும் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதுவரை செயலில் இறங்கி அதைச் செய்தவர்கள் மிகச்சிலரே. நேற்று… Continue reading சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்