மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

தூரத்தே கிறீச்சிடும் பறவைகள். மெல்ல ஓலமிடும் நாய். படுவேகமாகக் கடந்து செல்லும் வாகனங்கள். அவற்றின் இடையே தீனமான ஆனால் உறுதியான குரலில், “இப்ப உடல்நிலை சரியில்ல. தொடர்ந்து எழுதேலாமக் கிடக்கு. ஆனா தொடர்ந்து எழுதோணும் எண்டு ஆசையா இருக்கு.” என்று மலரன்னை சொல்லும் போது, அக்குரல் நம்மையும் ஏதோ செய்வதைக் உணரலாம். பழைய எழுத்தாளர்களில் ஒருவரான கச்சாய் இரத்தினத்தின் மூத்த மகளாகப் பிறந்த “அற்புதராணி காசிலிங்கம்” அம்மையாரின் புனைபெயர் தான் மலரன்னை. தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து… Continue reading மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

Library – Archive – Museum: தோற்றமும் பின்னணியும் பற்றிய வளங்கள்

Published on Author Natkeeran L. Kanthan

கல்வித் துறைகள், ஆய்வு முறைமைகள், சமூக நிறுவனங்கள் என்பன ஆக்கபூர்வமான விமர்சன நோக்கில் அணுகப்பட வேண்டியது அவசியம்.  நூலகங்கள் (Libraries), ஆவணகங்கள் (Archives), அருங்காட்சியகங்கள்  (Museums) ஆகிய மூன்றும் இவ்வாறே கூர்மையாக நோக்கப்படவேண்டும்.  பெரும்பாலும் இத்தகைய நினைவக நிறுவனங்கள் சமூகத்தின் அதிகார மையங்களோடு தொடர்புடையவையாகவே அமைகின்றன. இவற்றில்  எது ஆவணப்படுத்தப்படுகிறது, யார் ஆவணப்படுத்துகிறார்கள், எப்படி ஆவணப்படுத்துகிறது, யாருக்கு அணுக்கம் உள்ளது உட்பட்ட கேள்விகள் முக்கியமானவையாக அமைகின்றன. இன்றைய நவீன நூலகம் – ஆவணகம் – அருங்காட்சியக துறை நிறுவனங்களின்… Continue reading Library – Archive – Museum: தோற்றமும் பின்னணியும் பற்றிய வளங்கள்

பல்லூடக ஆவணக வளர்ச்சி

Published on Author Noolaham Foundation

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பல்லூடக ஆவணகம் பல பரிணாமங்களில் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஜெயரூபி சிவபாலன், குலசிங்கம் வசீகரன், இ. மயூரநாதன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், பிரபாகர் நடராசா, தமிழினி, ச. சாந்தன் உட்பட்ட பல பங்களிப்பாளர்களின் தன்னார்வப் பங்களிப்பால் நூலக ஒளிப்படச் சேகரம் 1,100 படங்களை தாண்டியுள்ளது.  இந்தப் படங்கள் சமூக வரலாற்று கல்வி முக்கியத்துவம் வாந்த படங்கள்.  பெரும்பாலானவை ஆவணக தரத்தில் (archival quality) அமைந்தவை.  இவர்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும். இலங்கைத் தமிழ்… Continue reading பல்லூடக ஆவணக வளர்ச்சி

நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. * ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born… Continue reading நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு