நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் சிலாகிக்கப்பட்டது 96 திரைப்படம். அதன் வெற்றிக்கும் சிறப்புக்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,  எல்லோரது வாழ்க்கையிலுமே மறக்க முடியாத பள்ளிப்பருவத்தை அத்திரைப்படம் சித்தரித்திருந்த விதமே அப்படத்தை அதிக கவனிப்புக்குள்ளாக்கி இருந்தது. ஆனால் அத்திரைப்படம் வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பேயே நம் நூலகம், அத்தகைய ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பள்ளிக்காலம் என்பது எல்லோருக்கும் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்துசெல்லும் ஒன்று. வகுப்பறைகளாக, நடைபாதைகளாக, மரத்தடிகளாக, பாடசாலைகள் நம் எல்லோர் மனதிலும்… Continue reading நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

அனைவருக்காகவும் நூலகங்கள்! – ஒரு படக்காட்சி

Published on Author தண்பொழிலன்

பால், இனம், மதம், வயது, உடல் இயலுமை, வர்க்கம் ஆகிய அனைத்து பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை நூலகங்கள். அனைவருடனும் பகிர்வையும், இணக்கத்தையும் பேணுவதையே அவை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். இதை வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ரெபேக்கா மெக்கோர்கிண்டேல் (Rebecca McCorkindale) வெளியிட்ட சிறுமவியல் (minimalist) படங்கள், உலகில் பலரின் கவனத்தையும் கவர்ந்தன. ரெபேக்கா அமெரிக்காவின் Gretna, Nebraska என்ற ஒரு சிறிய ஊரில் நூலகராகப் பணியாற்றுபவர். “அனைவருக்காகவும் நூலகங்கள்” (Libraries Are For Everyone) என்ற தொனிப்பொருளில் இவர் வரைந்த… Continue reading அனைவருக்காகவும் நூலகங்கள்! – ஒரு படக்காட்சி

திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016

Published on Author Noolaham Foundation

இந்த வாரம் (ஒக்ரோபர் 24 – 30, 2016) திறந்த அணுக்க வாரம் (Open Access Week) ஆகும்.  திறந்த அணுக்கம் என்பது அறிவு வளங்களை அனைவருக்கும் கட்டற்று கிடைக்கச் செய்தலுக்கான கொள்கையும் வழிமுறையும் ஆகும்.  திறந்த அணுக்கத்தில் அறிவு வளங்கள் கிடைப்பது கல்வி, ஆய்வு, சமூக வளர்ச்சிக்கு அவசியம் ஆகும். மொழி, கணிதம், அறிவியல், கலைகள் என்று அறிவு என்றும் கட்டற்று இருப்பதன் ஊடாகவே மனித சமூகம் வளர்சி பெறுகின்றது.  ஆனால் இந்த அறிவு வளங்களின்… Continue reading திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016