பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி பகிர்வதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளார். மேலும் நூலக நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவர்; நூலக நிறுவனத்தால் 2013ல் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு மாநாட்டில் முக்கிய ஆலோசகராகவும், வளவாளராகவும் ஈழத்தமிழ் ஆவணப்படுத்தலுக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார். அவரது நூல்களில் 1) இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் 2) ஈழத்து நவீன இலக்கியம் 3) ஈழத்து நவீன கவிதை 4)… Continue reading பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

நூலகத்தில் அம்பலம், நடுகை இதழ்கள்

Published on Author Noolaham Foundation

“அம்பலம் குழுமம்” 2000களில் வெளியிட்ட “அம்பலம் இதழ்”, “நடுகை கவிதை இதழ்” முதலியன உட்பட அவர்களது அனைத்து வெளியீடுகளையும் முழுமையாக நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி, திறந்த அணுக்கத்தில் உலகலாவிய ரீதியில் பகிர்வதற்கான அனுமதியினை அதன் ஆசிரியர் த.பிரபாகரன் 25/09/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் நிறுவனத்தின் யாழ்ப்பாண நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்தில் வைத்து கையளித்தார். மேலும் அம்பலம் ஆசிரியர் த.பிரபாகரன் அவர்களால் “நெம்பு” எனும் பெயரில் அமைந்த இளைஞர்களுக்கான ஒரு மாத இதழும் விரைவில்… Continue reading நூலகத்தில் அம்பலம், நடுகை இதழ்கள்