அபூர்வ சிந்தாமணி | காலக்கண்ணாடி 06

Published on Author தண்பொழிலன்

இலங்கையில் இதழியல் துறையைப் பொறுத்தவரை, மிகச் சில பத்திரிகைகளே அதிகமாகக் கவனிக்கப்பட்டவையாகவும், பெருமளவு வாசகர்களைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. அத்தகைய பிரபலமான பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, சிந்தாமணி. சிந்தாமணி, 1980கள் முதல் கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக வெளியான வார இதழ். அரசியல், இலக்கியம், பண்பாடு, என்று பல்தரப்பட்ட தகவல்களுடன் சுமார் 50 பக்கங்களில் இது வெளிவந்தபடி இருந்தது. இதே பத்திரிகையின் நாளிதழ், தினபதி என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருந்தது. இம்மாத காலக்கண்ணாடியில், அந்த சிந்தாமணி இதழ் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு… Continue reading அபூர்வ சிந்தாமணி | காலக்கண்ணாடி 06

அறுபதாண்டுகளுக்கு முன் ஒரு புத்தாண்டு பருவகாலம் | காலக்கண்ணாடி 05

Published on Author தண்பொழிலன்

நூலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய 2019 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!   இம்முறை காலக்கண்ணாடியில் நாம் பார்க்க இருப்பது, ஈழநாடு பத்திரிகை. யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து வெளியான பழம்பெரும் தினசரிகளில் ஒன்று. 1960 புத்தாண்டை அண்டி வெளியான அவ்விதழின் 1959 டிசம்பர் 26 இதழைத் தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம். “இடதுசாரிப் பிளவுகள்: டட்லி அதிர்ஷ்டம்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில், கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளைத் தோற்கடித்து யு.என்.பி வென்ற பின்னணி… Continue reading அறுபதாண்டுகளுக்கு முன் ஒரு புத்தாண்டு பருவகாலம் | காலக்கண்ணாடி 05

சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04

Published on Author தண்பொழிலன்

இலங்கைப் பத்திரிகைச் சூழலைப் பொறுத்தவரை, சரிநிகர் மிக முக்கியமான மாற்று இதழ். “சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே” என்ற பாரதியின் வரிகளிலிருந்து தனக்கான பெயரைச் சூடியிருந்தது இவ்விதழ். 2001 வரை பல்வேறு செய்திகளைச் சுமந்துவந்த சரிநிகர், இலங்கையின் போர்க்கால சூழலில், மாற்றுக்கருத்துக்களுக்கு மாத்திரமன்றி, சிறுகதை, கவிதை முதலியவற்றிலும் பல பரிசோதனைகள் இடம்பெற இடமளித்து, ஈழத்து இலக்கியத்தையும் செழுமைப்படுத்தியது. 1990 யூன் மாதம் மாத இதழாக வெளிவர ஆரம்பித்த இது, பின்னர் வார இதழாக வெளியாக ஆரம்பித்தது. சரிநிகரின் ஆறாவது… Continue reading சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04

மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

Published on Author தண்பொழிலன்

கிழக்கைத் தளமாகக் கொண்டு வெளியான பத்திரிகைகளில் சில பத்திரிகைகளே தொடர்ச்சியாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது தினக்கதிர். 1990களின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட தினக்கதிர், பல்சுவைத் தகவல்களைத் தாங்கிய தினசரிப் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. அதன் சில இதழ்கள் இருவார இதழ்களாக வெளியாயின. அவற்றில்  1998 ஜூன் 14- 20  திகதியிட்ட “தினக்கதிர்” பத்திரிகை ஒன்றேயே நாம் இன்று பார்க்கவுள்ளோம். இவ்விதழின் தலைப்புச் செய்தியாக “திட்டமிட்டபடி யூலை மாதம் சார்க் மாநாடு. சார்க் தலைவர்கள் இனப்பிரச்சினைத் தீர்வினை… Continue reading மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

Published on Author தண்பொழிலன்

  உலகின் வல்லரசுகள் பல ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை இடம்பெற்றது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதற்கும் முன் இலங்கையில் வெளியான ஒரு பத்திரிகையின் செய்தியொன்றை இவ்வாரம் நாம் பார்க்கலாம்.   இந்தப் பத்திரிகை வெளியான ஆண்டு 1935. வெளியிட்ட பத்திரிகையின் பெயர், ஈழகேசரி ஈழகேசரி, 1930களிலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை. அதை நிறுவியவர் குறிப்பிடத்தக்க ஈழத்து ஆளுமைகளுள் ஒருவரான நா.பொன்னையா அவர்கள்.அதன் 1935.07.21 திகதியிட்ட பத்திரிகையில் “இலங்கையில் யுத்தவீரர்… Continue reading இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது

Published on Author தண்பொழிலன்

“சிங்களத்தையும் தமிழையும் இந்த நாட்டின் உத்தியோக பாஷைகளாக்க இலங்கை அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று இலங்கைப் பிரதமர் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் கூறியதை எதிர்த்து வெகுசீக்கிரத்தில் அரசாங்க பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்படும்” இந்தச் செய்தியைப் படித்து நீங்கள் ஒன்றும் குழப்பமடையத் தேவையில்லை. இது சமகாலச் செய்தி அல்ல.செய்தியில் கூறப்படும் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல. இலங்கையின் மூன்றாவது பிரதமர். ஆம். சரியாக அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் பழம்பெரும் பத்திரிகைகளில் ஒன்றான சுதந்திரனின், 1954… Continue reading காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது