அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் ,மாகாண, வலய மட்ட பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் பரிகார கற்றல் கையேடுகள் உட்பட மாணவர் கற்றல் கற்பித்தல் சார் விடயங்கள் போன்றவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான எழுத்து மூல அனுமதியை வடமாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுற்றறிக்கை மூலம் வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் வலயப்பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.   இதன் முதற்கட்டமாக , துணுக்காய்… Continue reading அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

திருகோணமலையில் விக்கிப்பீடியா – நூலகம் பட்டறை நவம்பர் 26, 2017

Published on Author தண்பொழிலன்

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் ஆகியன இணைந்து எதிர்வரும்  நவம்பர் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில்  ஒரு முழுநாட்பட்டறையை  நிகழ்த்த இருக்கின்றன. இப்பயிற்சிப்பட்டறையானது, இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது. வரோதய நகரின் கன்னியா வீதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஞாயிறு பகல் 9 மணி முதல் மாலை 2 மணி வரை இப்பட்டறை இடம்பெறும். நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பொதுவகம், ஆவணகம்,  தொழிற்கலை ஆவணப்படுத்தலுக்கான அறிமுகம்,  நூலகத்தின் பிரதான செயற்றிட்டங்கள்… Continue reading திருகோணமலையில் விக்கிப்பீடியா – நூலகம் பட்டறை நவம்பர் 26, 2017

2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் முதன்மை முடிவெடுக்கும் சபை வழிகாட்டுநர் சபை (Regulatory Board) ஆகும். இந்தச் சபை ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவு (Annual Plan and Budget) நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பான முடிவெடுத்தல் (Decision Making) வளந் திரட்டுதல் (Resource Mobilization) வியூகத் திட்டமிடல் (Strategic Planning) செயற்திட்டங்கள்/செயலாக்கங்கள் மேற்பார்வை (Process Oversight) உட்பட்ட பணிகளுக்குப் பொறுப்பானது. இந்தச் சபை சுமார் மாதம் இருமுறை அல்லது ஆண்டுக்கு 20-25 வரையான சந்திப்புக்களை மேற்கொள்ளும். இந்தச் சந்திப்புக்கள் நடைபெறும்… Continue reading 2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

புதிய தன்னார்வலர்கள் நூலகத்துடன் இணைவு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தினால் கடந்த பதினொரு வருடங்களாக உலகளாவியரீதியில் மேற்கொள்ளப்படும் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் சார்ந்த ஆவணங்களை எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் செயற்பாடுகளுக்கு உலகம் பூராகவும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ச்சியாக பலவழிகளில் பங்களிப்பு செய்துவருகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களில் நூலக நிறுவனத்தினோடு பல புதிய தன்னார்வலர்களும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் இணைந்து கொண்டு, இலங்கை தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலுக்கு பிரஞ்ஞை பூர்வமான தமது பங்களிப்பினை பலவழிகளிலும் செய்து வருகின்றனர். மேலதிக தன்னார்வலர்களின்… Continue reading புதிய தன்னார்வலர்கள் நூலகத்துடன் இணைவு