யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

Published on Author தண்பொழிலன்

இலங்கை தொன்றுதொட்டே பல நிகழ்த்துகலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அவற்றில் சிங்கள மரபு சார்ந்த அரங்காற்றுகைகளும் கலைகளும் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்று இன்றும் அரங்கேற்றப்படுகின்றன.ஆனால் ஈழத்தமிழ் சார்ந்த நிகழ்த்துகலைகளுக்கு , போதிய சமூக அங்கீகாரமோ, பரவலாக்கமோ அவை காணவில்லை. அதிலும் சில நிகழ்த்துகலைகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்கும் குறிப்பிட்ட சமூக அந்தஸ்து கொண்டோருக்கும் வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. காலவோட்டத்தில் மிக வேகமாக அருகிவரும் இவை, இன்னும் முறைப்படி ஆவணப்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை எனலாம். அந்த வகையில், அரங்கியல்… Continue reading யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

Published on Author தண்பொழிலன்

  கனடாவின் முன்னணித் தமிழ் அரங்காற்றுகைக் குழுமங்களில் ஒன்றான “மனவெளி கலையாற்றுக் குழு” ஆனது, எதிர்வரும் யூன் 30 அன்று “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தை மேடையேற்ற உள்ளது. “ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) எனும் நாடகம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களில் ஒருவரும், நவீனத்துவ முன்னோடிகளில் ஒருவருமான ஹென்ரிக் இப்சனின்  படைப்பாகும். அந்நாடகம் அரங்கேறிய 1879இலிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த நாடகம் அது. நோரா எனும் பாத்திரப் படைப்பின் மூலம்,… Continue reading மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு குருக்கள்மடத்தினைச் சேர்ந்த சிறுகதை, நாடகம் மற்றும் சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சமூக ஆய்வாளர் வி.கெளரிபாலன் அவர்கள், தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும், தனது நூல்களையும் நூலக நிறுவனத்திடம் கையளித்துள்ளார். இவரது நூல்களான 1) பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள், 2) வானுறையும் தெய்வத்தினுள் முதலிய நூல்கள் ஏற்கனவே நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் கெளரிபாலனது நூல்கள்- http://tinyurl.com/Gowripalan {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

பல்துறைக் கலைஞர் ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்கள் எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

ஈழத்துத் தமிழ் உலகில் 1960கள் முதல் தலை சிறந்து விளங்கிய நாடகவியலாளர், எழுத்தாளர் போன்ற பல்துறை விற்பன்னர், மறைந்த கலைப்பேரரசு ஏ.ரீ. பொன்னுத்துரை அவர்களின் எழுத்தில் அமைந்த வெளியிடப்பட்ட நூல்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தப்பட்டு மறக்க முடியா வரலாறாக விளங்குகின்றது. கலைப்பேரரசு ஏ.ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணமாக்கிப் பகிர்வதற்கான அனுமதியினை அவரது மகள் திருமதி தயாபரன் அவர்கள் 31/08/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்தார்.… Continue reading பல்துறைக் கலைஞர் ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்கள் எண்ணிம நூலகத்தில்