மலையக நாட்டாரியல் | காட்டேரி வழிபாடு

Published on Author தண்பொழிலன்

  வாய்மொழி வரலாறு என்பது வாய்மொழியின் ஊடாக, நினைவுகள் ஊடாக நபர்கள், சமூகங்கள், நிகழ்வுகள், விடயங்கள் பற்றி வரலாற்றுத் தகவல்கள்களைத் திரட்டுதல், பாதுகாத்தல், பகிர்தல், விளங்க்கிக்கொள்தல் முறையையும், அது தொடர்பான கற்கையையும், அந்தச் சேகரிப்புக்களையும் குறிக்கிறது.[1] வாய்மொழி வரலாறு எழுத்தாவணங்களைத் தாண்டி தகவலைப் பெற, பதிவுசெய்ய முனைகிறது நாட்டாரியல் மிகச்சுவாரசியமானது. மனிதனின் உளவியலையும், சமூகக்கூட்டு மனத்தையும் ஆராய அதைவிட மிகச்சிறந்த துறை வேறெதுவும் இல்லை. அதிலும் மனிதசக்தியை மீறியதாக மக்கள் நம்பும் நாட்டார் வழிபாடுகள் பற்றிய கற்கைகள், மானுடவியலில் மிகக்குறிப்பிடத்தக்க… Continue reading மலையக நாட்டாரியல் | காட்டேரி வழிபாடு

மலையகத் தமிழ் இலக்கியம் – ஓர் அறிமுக நூல்

Published on Author தண்பொழிலன்

மலையகம் பல இலக்கியவாதிகளை பிரசவித்த மண்.மலையக இலக்கியம் பற்றி மிக முக்கியமான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. வெளிவந்த நூல்களில் கலாநிதி.க.அருணாசலத்தால் எழுதப்பட்டு 1994இல் வெளியிடப்பட்ட “மலையகத் தமிழ் இலக்கியம்” குறிப்பிடத்தக்க ஒன்றெனக் கருதலாம். தமிழ் மன்றத்தின் வெளியீடாக வெளிவந்த இந்நூலின் ஆசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முதுமுறை விரிவுரையாளர் என்பது அதிக கவனிப்பைப் பெற்றுக்கொள்கிறது.   இந்நூலில் ஐந்து அத்தியாயங்கள் அடங்குகின்றன. “தோட்டத்தொழிலாளர்கள் ஒரு அறிமுகம்” எனும் முதலாவது அத்தியாயம், மலையகத்தமிழரின் வரலாற்றுப்பின்னணி , அவர்கள் சந்தித்த… Continue reading மலையகத் தமிழ் இலக்கியம் – ஓர் அறிமுக நூல்

விக்கிப்பீடியா – நூலகம் இணைந்து ஹட்டனில் பயிற்சிப் பட்டறை

Published on Author Vijayakanthan

விக்கிப்பீடியா, நூலகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 28.08.2017 திங்கட்கிழமையன்று மலையகத்தில் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தினர். இப்பயிற்சிப்பட்டறை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் ”இலங்கையின் கிழக்கு – வடக்கு – மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே மேற்படி பயிற்சி பட்டறை மலையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணிணித்துறை நிபுணர்கள் மற்றும்… Continue reading விக்கிப்பீடியா – நூலகம் இணைந்து ஹட்டனில் பயிற்சிப் பட்டறை