யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

Published on Author தண்பொழிலன்

இலங்கை தொன்றுதொட்டே பல நிகழ்த்துகலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அவற்றில் சிங்கள மரபு சார்ந்த அரங்காற்றுகைகளும் கலைகளும் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்று இன்றும் அரங்கேற்றப்படுகின்றன.ஆனால் ஈழத்தமிழ் சார்ந்த நிகழ்த்துகலைகளுக்கு , போதிய சமூக அங்கீகாரமோ, பரவலாக்கமோ அவை காணவில்லை. அதிலும் சில நிகழ்த்துகலைகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்கும் குறிப்பிட்ட சமூக அந்தஸ்து கொண்டோருக்கும் வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. காலவோட்டத்தில் மிக வேகமாக அருகிவரும் இவை, இன்னும் முறைப்படி ஆவணப்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை எனலாம். அந்த வகையில், அரங்கியல்… Continue reading யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

“யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

Published on Author தண்பொழிலன்

“யாழ்ப்பாண இராச்சியம்” எனும் நூலானது, இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பொறுத்தவரை, மிக முக்கியமானதாகும். பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் தொகுப்பில், 1992 இல் யாழ்.பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த இந்நூல், வட இலங்கையில் நிலவிய தமிழரசு பற்றிய அதிகபட்ச சான்றாதாரங்களுடன் எழுதப்பட்ட அருமையான நூல் ஆகும். இந்நூலானது, அதிகபட்ச வரலாற்றுணர்வோடு இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்நூல்களில் ஒன்று எனலாம். யாழ் தீபகற்பத்தின் வரலாற்றைப் பாடுகின்ற, கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய தொன்மங்களை அப்படியே எடுத்தாளாமல், அவற்றில் “கதை” எனத் தள்ளத்தக்கவற்றைத்… Continue reading “யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

Toronto – Jaffna Partnership – Library Initiative Launch

Toronto mayor John Tory and Northern province chief minister Justice C. V. Vigneswaran signed a Memorandum of Understanding last year. Economic development, education, governance and library services were selected as key areas for cooperation. The focus of library services as one of the four core areas demonstrate the critical role libraries can play in reconstruction… Continue reading Toronto – Jaffna Partnership – Library Initiative Launch

நூலகத்தில் வலம்புரி நாளிதழ்

Published on Author Noolaham Foundation

பதினைந்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வலம்புரிப் பத்திரிகையானது 1999ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இற்றை வரை சிறப்பான செய்திப்பதிவுகளை மேற்கொண்டுவரும் ஓர் தினசரி செய்திப் பத்திரிகை ஆகும். மேலும் இலங்கையின் வடபகுதி ஊடகங்களில் பதினைந்து ஆண்டுகால சிறப்பான செய்திப்பதிவுகள் அடங்கிய வரலாற்றுப் பின்புலத்தினை கொண்ட இப்பத்திரிகையானது தனது ஆரம்பகால வெளியீடுகள் உட்பட அனைத்து வெளியீடுகளையும் இலங்கை தமிழ் பேசும் சமூகத்தின் எண்ணிம ஆவணக்காப்பகமான நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தி உலகலாவிய ரீதியில் திறந்த அணுக்கத்தில் பகிரவுள்ளது. நூலக… Continue reading நூலகத்தில் வலம்புரி நாளிதழ்

பேரா. செ. கிருஷ்ணராசாவின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா தனது படைப்புக்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்குரிய அனுமதியினை 01/10/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்தார். http://tinyurl.com/qynqd97 நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா அவர்களினுடைய 1) இலங்கை வரலாறு- பாகம் 1 2) இலங்கை வரலாறு- பாகம் 2 3) தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும் 4) நங்கையரின் அணிகலன்கள்: யாழ்ப்பாணப் பாரம்பரியம் பற்றிய நுண்கலை ஆய்வு போன்ற நூல்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.… Continue reading பேரா. செ. கிருஷ்ணராசாவின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்