அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

Published on Author தண்பொழிலன்

தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத நாள் 1981 யூன் 1. அன்று நள்ளிரவிலேயே தமிழரின் கல்விச்சொத்தான யாழ்ப்பாண நூலகம், திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. அதன் விளைவையொத்த எதிர்பாராத இன்னொரு சம்பவத்தை இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சந்தித்திருக்கிறது பிரேசில். அந்நாட்டின் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் அமைந்திருந்த தேசிய  அருங்காட்சியகம், கடந்த 2018 செப்டம்பர் இரண்டாம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்தொழிந்து போயிருக்கிறது.   ரியோ டி ஜெனிரோவின் அருங்காட்சியகம், அங்கிருந்த மிகப்பழைய கட்டிடங்களுள் ஒன்று. கடந்த 1892இல் அருங்காட்சியகமாக… Continue reading அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

நூலகத்தில் நினைவு மலர்கள்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் கடந்த பதினொரு ஆண்டுகளில் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாக 300க்கும் மேற்பட்ட நினைவு மலர்களை (கல்வெட்டுக்கள்) ஆவணப்படுத்தி http://tinyurl.com/nt5bqcf மூலம் பகிர்ந்துள்ளது. பொதுவாக நூலகங்களிலோ ஆவணகங்களிலோ நினைவு மலர்கள், அந்தியட்டி, திவச கல்வெட்டுக்கள் ஆவணப்படுத்துதல் அரிதாக உள்ளது. எமது சமூக, சமய, பண்பாட்டு, பிரதேச வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த வெளியீடுகளின் முக்கியத்துவம் போதிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. இச் சூழலில் நூலக நிறுவனம் இவற்றின் முக்கியத்துவம் கருதிப்… Continue reading நூலகத்தில் நினைவு மலர்கள்

பேரா. செ. கிருஷ்ணராசாவின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா தனது படைப்புக்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்குரிய அனுமதியினை 01/10/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்தார். http://tinyurl.com/qynqd97 நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா அவர்களினுடைய 1) இலங்கை வரலாறு- பாகம் 1 2) இலங்கை வரலாறு- பாகம் 2 3) தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும் 4) நங்கையரின் அணிகலன்கள்: யாழ்ப்பாணப் பாரம்பரியம் பற்றிய நுண்கலை ஆய்வு போன்ற நூல்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.… Continue reading பேரா. செ. கிருஷ்ணராசாவின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்